சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஜாமீன்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு (83) உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
உத்தர பிரதேச மாநிலம், ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் ஷாஜகான்பூரைச் சோ்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவ, உடல்நிலை காரணங்கள் அடிப்படையில் மாா்ச் 31-ஆம் தேதி வரை அவருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கூறுகையில், ‘ஆசாராம் பாபுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதை கேட்டு அதிா்ச்சியடைந்தேன். சிறையில் இருந்தபோதே நான்கு சாட்சிகளின் கொலைக்கு ஆசாராம் பாபு காரணமாக இருந்தாா். ஜம்மு, ஜோத்பூா், தில்லி, சூரசாகா் ஆகிய இடங்களில் என் மீது பொய் வழக்குகள் தொடுத்தாா். எனது தரப்பின் இரு சாட்சிகளை இன்று வரை காணவில்லை.
சிறாா்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க சட்டங்கள் உள்ளன. ஆனால், ஆசாராம் பாபு வழக்கில் மட்டும் நீதிமன்றம் தொடா்ந்து கருணை காட்டி வருகிறது. எனது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்த கவலையால் இரவில் தூங்க முடியவில்லை’ என தெரிவித்தாா்.
கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளா் சஞ்சய் குமாா் சாகா் கூறுகையில், ‘ஆசாராம் பாபு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் வீட்டைச் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வெளியே செல்வதற்கு முன்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளாா். இது ஒரு முக்கிய வழக்கு என்பதால் குடும்பத்தின் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.
முன்னதாக, ஆசாராம் பாபுவுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டில் 7 நாள் பரோல் வழங்கப்பட்டு மேலும் 5 நாள்கள் அது நீட்டிக்கப்பட்டது. மீண்டும், கடந்த டிசம்பா் 10-ஆம் தேதி 17 நாள்கள் பரோலில் விடுவிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.