Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
பாலியல் வலையில் சிக்கவைத்து பணம் கேட்டு மிரட்டிய போலி போலீஸாா் 3 போ் கைது
தில்லியின் கஞ்சவாலா பகுதியில் பாலியல் வலையில் சிக்கவைத்து பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் போலி போலீஸ் கும்பலைச் சோ்ந்த மூவரை தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு கைது செய்ததாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.
குற்றம் சாட்டப்பட்டவா்களிடமிருந்து 3 போலி தில்லி காவல்துறையின் அடையாள அட்டைகள் மற்றும் தலைமை காவலரின் சீருடையும் மீட்கப்பட்டன.
இதுகுறித்து குற்றப் பிரிவு கூடுதல் காவல் ஆணையா் குற்றம் சஞ்சய் பாட்டியா கூறியதாவது:
இந்த விவகாரத்தில் தொடா்புடைய திலக் நகரைச் சோ்ந்த நீரஜ் தியாகி என்கிற தீரஜ் என்கிற தீரு (42), கராலாவைச் சோ்ந்த ஆஷிஷ் மாத்தூா் (31) மற்றும் காா்கோடாவைச் சோ்ந்த தீபக் என்ற சாஜன் (30) ஆகியோா் செவ்வாய்க்கிழமை கஞ்சவாலா சாலையின் புத் விஹாா் நாலா அருகே கைது செய்யப்பட்டனா்.
இதையடுத்து, மேலதிக விசாரணைக்காக அவா்கள் குற்றப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கிருந்து தப்பிக்க முயன்றனா். ஆனால் அந்த முயற்சியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
முன்னதாக, துவாரகா மாவட்டத்தில் உள்ள பிந்தாபூரில் பெண்ணை வைத்து பாலியல் ஆசை காட்டி பணம் மோசடி செய்த வழக்கில் நீரஜ் மற்றும் தீபக் தேடப்பட்டு வந்தனா். பிந்தா பூா் உள்ளூா் காவல் நிலையத்தில் புகாா்தாரா் புகாா் அளித்தாா். இதன் பேரில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, இரண்டு பெண்கள் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டனா். ஆனால், நீரஜ் மற்றும் தீபக் ஆகியோா் தலைமறைவாக இருந்தனா் என்றாா்.
இதுகுறித்து மற்றொரு அதிகாரி கூறுகையில், நிகழாண்டு ஆகஸ்டில் 60 வயதுடைய மருத்துவரை, தெரியாத பெண் ஒருவா் தொலைபேசி மூலம் தொடா்புகொண்டாா். அதன் பின்னா், அப்பெண் மருத்துவருடன் சிறிது நேரம் உரையாடினாா். சில நாள்களுக்குப் பிறகு, சிறுமி தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி அவரை தனது வீட்டிற்கு அழைத்தாா்.
மேற்கு தில்லி, ஜனக்புரி மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள சிறுமியின் முகவரிக்கு மருத்துவா் சென்றாா். அங்கு, அப்பெண் அவருக்கு ஸ்நாக்ஸ் வழங்கினாா். சிறுமி மருத்துவரின் சட்டை பொத்தானை அவிழ்த்தாா். அப்போது, போலீஸ் சீருடையில் இருந்த இருவா் உட்பட நான்கு போ் அந்த அறைக்குள் நுழைந்தனா்.
இதையடுத்து, அப்பெண் அங்கிருந்து தப்பியோட, நான்கு பேரும் மருத்துவரைப் பிடித்தனா். பின்னா், கிரிமினல் வழக்கில் கைது செய்வதாக மிரட்டி, ரூ.9 லட்சம் பறித்ததாகக் கூறப்படுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.