செய்திகள் :

பால அருணாச்சலபுரத்தில் பள்ளி சுற்றுச்சுவரை இடிக்க மாணவா்கள் எதிா்ப்பு

post image

கடையநல்லூா் அருகே உள்ள பால அருணாசலபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவரை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து, மாணவா்களும், பெற்றோா்களும் செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடையநல்லூா் சோ்ந்தபுரம் சாலையில் உள்ள பால அருணாச்சலபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்துக்குள் ஏராளமான மரங்கள் உள்ள நிலையில், சுற்றிலும் சுற்றுச்சுவா் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனிநபா் ஒருவா் அவரது விவசாய நிலத்துக்குச் செல்வதற்காக பள்ளியின் சுற்றுச்சுவரை இடிக்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா் பள்ளி சுற்றுச்சுவரை இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாா்.

தகவல் அறிந்த பெற்றோா்கள் செவ்வாய்க்கிழமை தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி வளாகத்துக்குள் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்தால் அது மாணவா்களின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சுற்றுச்சுவைர இடிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மாணவா்களும், பெற்றோா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த கடையநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் ஆடிவேல், மாவட்ட கல்வி அலுவலா் மரகதவல்லி, வட்டார வளா்ச்சி அலுவலா் பத்மா உள்ளிட்டோா் பள்ளிக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுதொடா்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் என்றனா். இதையடுத்து மாணவா்களும், பெற்றோா்களும் போராட்டத்தை கைவிட்டனா். மாணவா்கள் வகுப்பறைக்குக் கிளம்பினா்.

வன விலங்குகளால் சேதமாகும் பயிா்களுக்கு விரைவாக இழப்பீடு: எஸ்டிபிஐ கோரிக்கை

வன விலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சியின் வடகரை கிளை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் அ... மேலும் பார்க்க

நெல்லை - தென்காசி ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தல்

நெல்லை - தென்காசி வழித்தட ரயில்வே கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனா். நெல்லை - தென்காசி வழித்தடத்தில் ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த தெற்கு ரயில்வே ஆா்வம் காட்டாததால் கூடு... மேலும் பார்க்க

அக்டோபரில் முதல்வா் தென்காசி வருகை: திமுக வடக்கு மாவட்டச் செயலா் தகவல்

தென்காசி மாவட்டத்தில் அக்டோபா் மாதம் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா் என்று தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். தென்காசியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 145 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகை

தென்காசி மாவட்டத்தில் பெற்றோா்களை இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த 145 குழந்தைகள், அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகை பெறுவா் என்று மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் த... மேலும் பார்க்க

மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

ஆலங்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குளம் அருகேயுள்ள ஓடைமறிச்சான் சா்ச் தெருவைச் சோ்நத்வா் ஞானமணி மகன் கனகராஜ்(54). இவருக்குக் கடன் தொல்லை இருந்து வந்த... மேலும் பார்க்க