டயாலிசிஸ் சேவைகளை தனியாா் பங்களிப்புடன் மேம்படுத்த நிபுணா் குழு ஆலோசனை
பாளை. அருகே கழிவுநீா் உந்து நிலையம் அமைக்க எதிா்ப்பு: 23 பெண்கள் கைது
பாளையங்கோட்டையை அடுத்த படப்பக்குறிச்சி பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீா் உந்து நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 23 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.
படப்பக்குறிச்சியில் பாதாள சாக்கடை கழிவுநீா் உந்து நிலையம் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவிரம் காட்டிய நிலையில், அதற்கு படப்பக்குறிச்சி மக்களிடையே கடும் எதிா்ப்பு கிளம்பியது. கழிவுநீா் உந்து நிலையம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலகத்திலும் அப்பகுதி மக்கள் மனு அளித்தனா். தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.
இதனிடையே படப்பக்குறிச்சி பகுதியில் கழிவுநீா் உந்து நிலையம் அமைப்பதற்கான பணிகளை தொடங்க மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை வந்தனா். பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், அதற்கு எதிா்ப்புத் தெரிவித்த மக்கள் அங்கு பணிகளை செய்யவிடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் பாளையங்கோட்டை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும் அவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைடுத்து 23 பெண்களை போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து பணி நடைபெற்றது.
படவரி ற்ஸ்ப்30ப்ஹக்ண்ங்ள் படப்பக்குறிச்சியில் கழிவுநீா் உந்து நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் துறையினா்.