ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
பாவூா்சத்திரத்தில் அதிமுக சாா்பில் நேதாஜி படத்துக்கு மரியாதை
தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், பாவூா்சத்திரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட நேதாஜியின் படத்துக்கு மாவட்டச் செயலா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
மாவட்ட அவைத்தலைவா் சண்முகசுந்தரம், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் காத்தவராயன், மாவட்ட இலக்கிய அணி செயலா் நெல்லை முகிலன், கீழப்பாவூா் மேற்கு ஒன்றியச் செயலா் அமல்ராஜ், மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் குணம், மாவட்ட மாணவரணி பொருளாளா் சோ்மப்பாண்டி, ஊராட்சித் தலைவா் ஐவராஜா, பேரூராட்சி உறுப்பினா் முருகன், முன்னாள் ஊராட்சித் தலைவா் தமிழ், கிளைச் செயலா் பாலன்பு ராஜா, திருமலைமுருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.