மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை: அமைச்சர்
பிக் பாஸ் தர்பார்! போட்டியாளர்களின் நடிப்பு ரசிகர்களைக் கவருமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் தர்பார் போட்டி நடைபெறுவது வழக்கம்.
இதில் ராஜா, ராணி, மந்திரி, ராஜகுரு, படைத்தளபதி போன்று பல்வேறு பாத்திரங்களில் வேடமிட்டு பிக் பாஸ் போட்டியாளர்கள் நடிக்க வேண்டும்.
நாள் முழுவதும் அதே பாத்திரத்தில் இருக்க வேண்டும் என்பது பிக் பாஸ் நிபந்தனைகளில் ஒன்று. அதனால், பிக் பாஸ் போட்டியாளர்கள் அந்த பாத்திரங்களாகவே வாழ வேண்டும்.
பிரபலங்கள் இவ்வாறு வேடமிட்டு நடிப்பது, பார்வையாளர்களைப் பெரிதும் கவரும் என்ற எதிர்பார்ப்பில் இதுபோன்ற சுற்றுகள் பிக் பாஸ் போட்டியில் வைக்கப்படுகின்றன.
ஏமாற்றமளித்த எதிர்பார்ப்பு
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது இம்முறை ஆண்கள் - பெண்கள் என இரு அணிகளுக்கு இடையிலான போட்டியாக நடைபெற்று வருகிறது.
இதனால், இம்முறை பிக் பாஸ் தர்பார் டாஸ்க்கிலும் ஆண்கள் தேசம், பெண்கள் தேசம் என இரு நாடுகள் உருவாக்கப்பட்டு, அதில் ராஜா, ராணி பாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்தமுறை பள்ளிக்கூட டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் போன்று வேடமிட்டு நடித்தனர். இதற்கு முந்தைய சீசன்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற பள்ளிக்கூட டாஸ்க் இம்முறை மிகுந்த வரவேற்பைப் பெறவில்லை.
பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் தங்களுக்குள் இருக்கும் வன்மத்தையே வெளிப்படுத்தி சண்டையிட்டனர். இதனால், இதில் சுவாரசியம் குறைவாக இருந்தது.
பிக் பாஸ் தர்பார்
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் மறுவாரமே பிக் பாஸ் தர்பார் டாஸ்க் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் ராஜாவாக ராணவும் ராணியாக சாச்சனாவும் வேடமிட்டுள்ளனர். மஞ்சரி படைத்தளபதியாகவும், பவித்ரா ராஜகுருவாகவும், செளந்தர்யா பணிப்பெண்ணாகவும் வேடமிட்டுள்ளனர்.
இதேபோன்று ஆண்கள் அணியில் படைத்தளபதியாக தீபக்கும், ராஜகுருவாக பணியாளாக ஜெஃப்ரி, குடிமக்களாக வி.ஜே. விஷால், முத்துக்குமரன் உள்ளிட்டோர் வேடமிட்டுள்ளனர்.
பள்ளிக்கூட டாஸ்ட் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறாததால், தற்போது பிக் பாஸ் தர்பார் மக்களை வெகுவாக கவருமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிக்க | பிக் பாஸ் வீட்டின் அரசனாக மாறிய ராணவ்! ராணியாக சாச்சனா!