செய்திகள் :

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறை... அருணுக்கு பாடம் எடுத்த விஜய் சேதுபதி!

post image

பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை நடக்காத சம்பவம் பிக் பாஸ் தமிழில் நடைபெற்றுள்ளது.

பிக் பாஸ் தொகுப்பாளர் ஒருவர், நிகழ்ச்சி முடிந்த பிறகு, பிக் பாஸ் பேசும் ஒலிவாங்கியில் போட்டியாளருடன் பேசி குழப்பத்துக்கு தீர்வு கண்டது இதுவே முதல்முறை.

பிக் பாஸ் வார இறுதியையொட்டி போட்டியாளர்களுடன் தொகுப்பாளர் பேசுவது வழக்கம். இதில், வாரம் முழுவதும் நடைபெற்ற போட்டிகளின் தன்மை, அதில் போட்டியாளர்கள் நடந்துகொண்ட விதம், போட்டியில் நடந்த தவறுகள், விதிமீறல்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.

அத்தோடு இறுதியாக வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடத் தகுதியில்லாத நபரை வெளியேற்றுவர்.

பிக் பாஸ் வீட்டில் பாகுபாடா?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 69வது நாளான நேற்று, நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே நடிகர் சத்யா வெளியேற்றப்பட்டார்.

இது எதிரபாராத ஒன்று. ஏனெனில், ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியின் இறுதியில்தான் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். ஆனால், இம்முறை நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே வேளியேற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து போட்டியாளர்களுடன் விஜய்சேதுபதி உரையாடினார். அப்போது அருண் பிரசாத் உடனான உரையாடல் குழப்பமும் சச்சரவுமாக நீண்ட நேரத்துக்கு நீடித்தது.

பிக் பாஸ் வீட்டில் யாரையும் தொழிலாளி (லேபர்) எனக் கூற வேண்டாம் என அருண் பேசுகிறார். தொழிலாளி (லேபர்), திறன்மிகு தொழிலாளி (ஸ்கில்டு லேபர்) என இரு பிரிவில் பிக் பாஸ் வீட்டின் அன்றாட பணிகள் பிரித்து வழங்கப்பட்டிருந்தது.

இதில் லேபர் என யாரையும் குறிப்பிட வேண்டாம். அதென்ன ஸ்கில்டு லேபர், அப்படியானால் பிக் பாஸ் வீட்டில் பாகுபாடு பார்க்கிறீர்களா? என அருண் பிரசாத் பேசினார்.

விஜய் சேதிபதி விளக்கம்

இதனைக் குறிப்பிட்டு பேசிய விஜய் சேதுபதி லேபர் என்பதில் எந்தவித பாகுபாடும் இல்லை. அது வெறும் சொல்தான். இதனால் நீங்கள் பாகுபாடு என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

அதில் பாகுபாடு தெரிந்தால், லேபர் என்ற சொல் உங்களுக்கு இழிவாகத் தோன்றுகிறது. அதனால்தான் அந்த வார்த்தையில் பாகுபாடு உள்ளதாக உங்களுக்குத் தோன்றுகிறது என்றார் விஜய் சேதுபதி.

நீண்ட நேரம் நீடித்த இந்த உரையாடல் முத்துக்குமரன் உள்ளிட்ட சக போட்டியாளர்களின் விளக்கத்துடன் ஓரளவு முடிவுக்கு வந்தது.

அதாவது வீட்டைக் கூட்டிப் பெருக்க யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை. ஓரிருமுறை பார்த்தாலே செய்துவிடலாம். இவ்வேலையைச் செய்பவர்கள் லேபர்.

ஆனால், சமையல் என்பது நாம் உடன் நின்று பார்த்தாலும் அதனை செய்வதற்கு குறிப்பிட்டகால பயிற்சி தேவை. இவர்கள் ஸ்கில்டு லேபர் என்று எளிமையாக விளக்கப்பட்டது.

எனினும் சமாதானம் அடையாத அருண் பிரசாத், பிக் பாஸ் வீட்டில் லேபர் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்பதைப் போன்று பிடிவாதமாக இருந்தார்.

அருண் பிரசாத் / வி.ஜே. விஷால்

நிகழ்ச்சி முடிந்த பின்னரும், பிக் பாஸ் வீட்டில் இது குறித்து அருண் பேசிக்கொண்டிருந்ததால், பிக் பாஸ் வழக்கமாகப் பேசும் ஒலிவாங்கியின் மூலம் அருண் உடன் உரையாடி இதனை மேலும் விளக்கினார் விஜய் சேதுபதி.

தொழிலாளி என்ற சொல் எந்த வகையில் தவறாகத் தெரிகிறது எனக் கேள்வி கேட்டு, அருண் பிரசாத் மனநிலையை விஜய் சேதுபதி விளக்கினார்.

பிக் பாஸ் வரலாற்றில் ஒரு தொகுப்பாளர், பிக் பாஸ் வீட்டின் ஒலி வாங்கியில் வந்து போட்டியாளருடன் பேசி விளக்கம் அளிப்பது இதுவே முதல்முறை.

இதன்மூலம் அருண் பிரசாத்துக்கு விஜய்சேதுபதி தகுந்த பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் விஜய்சேதுபதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: சத்யாவைத் தொடர்ந்து வெளியேறும் பெண் போட்டியாளர்!

ரூ. 1300 கோடி வசூலித்த புஷ்பா - 2!

புஷ்பா - 2 திரைப்படத்தின் 10-வது வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரைய... மேலும் பார்க்க

பிரபாஸ் படத்தில் நடனமாடும் நயன்தாரா!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் தி ராஜா சாப் படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசா... மேலும் பார்க்க

தாமதமாகும் இளையராஜா பயோபிக்! என்ன காரணம்?

இசையமைப்பாளர் இளையராஜா பயோபிக் திரைப்படத்தின் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இளையராஜா பயோபிக்கில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்குக... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: சத்யாவைத் தொடர்ந்து வெளியேறும் பெண் போட்டியாளர்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து நேற்று (டிச. 15) சத்யா வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இன்று மற்றொரு போட்டியாளர் வெளியேறவுள்ளார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 10 வாரங்களைக் கடந்துள்ளது. 69... மேலும் பார்க்க

அனுஷ்கா படத்தின் வெளியீட்டுத் தேதி!

நடிகை அனுஷ்கா நடிக்கும் புதிய படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா, பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட காணாமல் போனதுபோல் இரு... மேலும் பார்க்க

வேட்டையனுக்குக் கள்ளிப்பால் கொடுத்தார்கள்: ஞானவேல்

திரைப்படங்கள் மீது செலுத்தப்படும் வன்முறை குறித்து இயக்குநர் ஞானவேல் கருத்து தெரிவித்துள்ளார்.இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் கடந... மேலும் பார்க்க