செய்திகள் :

பிப்ரவரியில் சென்னை மெட்ரோ ரயிலில் 86.65 லட்சம் பேர் பயணம்!

post image

கடந்த பிப்ரவரி மாதத்தில் 86.65 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில்பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகத் தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 07.02.2025 அன்று 3,56,300 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2025, பிப்ரவரி மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 14,80,150 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 936 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 6,046 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,56,385 பயணிகள், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 34,22,286 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இதையும் படிக்க | 'டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது'- ஸெலென்ஸ்கி

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர்குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்ஆப், போன்பே, பேடிஎம் மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் பேடிஎம் செயலி மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளலாம்.

மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரின் மண்டலங்கள் உயர்வு!

சென்னை மாநகராட்சியின் தற்போதைய 15 மண்டலங்களை 20 மண்டலங்களாக உயர்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.பெருநகர சென்னை மாநகராட்சியில், தற்போது திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ரா... மேலும் பார்க்க

சீமான் வீட்டு காவலாளிகளுக்கு ஜாமீன் !

அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சீமான் உதவியாளர் அமல்ராஜ், சுபாகருக்கு சோழிங்கநல்லூர் நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியுள்ளது. ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அமல்ராஜ் மீது 2 ... மேலும் பார்க்க

6 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது: அண்ணாமலை

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளி... மேலும் பார்க்க

குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடிய முதல்வர்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை துணை முதல்வரும் அவரது மகனுமான உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.உத... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் வருகை?

மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் உதய நாளையொட்டி, தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் வருகைதர வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் உதய நாளாக ஆண்டுதோ... மேலும் பார்க்க