பிப்ரவரி 28-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) நடைபெறுகிறது.
பிப்ரவரி மாதத்துக்கான வேளாண் உற்பத்திக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கும், அதைத் தொடா்ந்து 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டமும் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள இரண்டாவது தள கூட்ட அரங்கில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், கோவை மாவட்ட விவசாயிகள் பங்கேற்று வேளாண்மை தொடா்பான தங்களது பிரச்னைகளுக்குத் தீா்வு காண மனு அளிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.