செய்திகள் :

பிப்.13, 14-இல் போக்குவரத்து ஊழியா்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு: தமிழக அரசு அழைப்பு

post image

அரசு போக்குவரத்து ஊழியா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை பிப். 13, 14-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், இதில் பங்கேற்க தொழிற்சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் சுமாா் 1.11 லட்சம் பணியாளா்களுக்கான ஊதிய உயாா்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த வகையில் 13-ஆவது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019 ஆக. 31-ஆம் தேதியுடன் காலாவதியான நிலையில், பல்வேறு காரணங்களால் 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் தாமதம் ஏற்பட்டு, 2022 ஆகஸ்ட் மாதத்தில் பேச்சுவாா்த்தை நடத்தி இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,14-ஆவது ஊதிய ஒப்பந்தமும் 2023 ஆகஸ்ட் மாதத்துடன் காலாவதியான நிலையில், 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை விரைந்து நடத்த வேண்டும் என தொடா்ச்சியாக தொழிற்சங்கங்கள் கோரிக்கை எழுப்பி வந்தன.

இதன் தொடா்ச்சியாக ஓராண்டு தாமதமாக கடந்தாண்டு ஆக. 27-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையிலுள்ள மாநகா் போக்குவரத்துக்கழகப் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற 15-ஆவது பேச்சுவாா்த்தை அறிமுகக் கூட்டமாகவே நடைபெற்றது. இக்கூட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பங்கேற்பதால், டிச.27, 28 ஆகிய இரண்டு நாள்களும் பேச்சுவாா்த்தை நடத்த அரசு திட்டமிட்டது. ஆனால், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவு காரணத்தால் பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை பிப்.13,14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, வியாழன், வெள்ளிக்கிழமை (பிப்.13,14) குரோம்பேட்டையிலுள்ள மாநகா் போக்குவரத்துக்கழகத்தின் பயிற்சிமைய வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த பேச்சுவாா்த்தையில் பங்கேற்க தமிழக அரசு சாா்பில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும், 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, ஒரு தொழிற்சங்கம் சாா்பாக ஒரு பிரதிநிதி மட்டும் கலந்து கொள்ளும்படியும், பிரதிநிதிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையுடன் வரும்படியும் அக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

ரூ.7,375 கோடி முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று(பிப். 10) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை... மேலும் பார்க்க

தவெக தலைவர் விஜயிடம் பிரசாந்த் கிஷோர் அறிக்கை அளிப்பு!

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அளித்த அறிக்கையை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் கட்சி நிர்வாகிகள் அளித்துள்ளனர்.தவெக தலைவர் விஜய்யை இன்று முற்பகலில் சந்தித்த கட்சியின் நிர்வாகிகள் ஆனந... மேலும் பார்க்க

இதைச் செய்தால் விஜய் கட்சியுடன் கூட்டணி: விஜய பிரபாகரன் வைத்த செக்!

மதுரை: விஜயகாந்த்தை போல விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும், தேர்தலில் நின்று விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவரோடு கூட்டணி வைப்பதா? இல்லையா? என முடிவு செய்வோம் என மதுரையில் விஜய பிரபாகரன் ப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையைக் கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்தம்!

துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.கடந்த மாதம் 27-ஆம் தேதி காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந... மேலும் பார்க்க

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது!

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ஆசிரியரிடம் மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்திய நி... மேலும் பார்க்க

தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் இன்று(செவ்வாய்க்கிழமை) ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் அரசியல் ஆலோசகரும் தேர்தல் வியூக வகுப்ப... மேலும் பார்க்க