செய்திகள் :

பிரசாந்த் - இயக்குநர் ஹரி கூட்டணி மீண்டும் இணைகிறதா?

post image

நடிகர் பிரசாந்த் - இயக்குநர் ஹரி கூட்டணி புதிய படத்திற்காக மீண்டும் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் பிரசாந்த் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்தாண்டு அந்தகன், தி கோட் போன்ற இரு திரைப்படங்கள் வெளியாகின.

அந்தகன் திரைப்படம் ஹிந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ திரைப்படத்தின் ரீமேக் என்றாலும் தமிழில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

அதேபோல, தி கோட் படத்திலும் அவரது நடிப்பும் நடனமும் பேசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிரசாந்த் நடிக்கும் அடுத்தப் படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பிரசாந்தின் 55-வது படமாகும்.

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் இயக்குநர் ஹரியின் முதல் படமான ‘தமிழ்’ திரைப்படத்தில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

இந்தப் படத்திற்கான அறிவிப்பை பிரசாந்த் பிறந்தநாளான ஏப். 6 அன்று படக்குழு வெளியிட இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

மேலும், இந்தப் படத்தில் கதாநாயகியாக கயாது லோஹர், பூஜா ஹெக்டே ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டில் பிரசாந்த் இரு படங்கள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அதற்கான அறிவிப்புகள் அவரது பிறந்தநாளன்றே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!

ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் சா்வதேச துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பையில் இந்தியாவின் சிஃப்ட் கௌர் சர்மா 50மீ. 3 பொசிஷன் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 23 வயத... மேலும் பார்க்க

2 கோல்கள் அடித்த ரொனால்டோ: சௌதி லீக்கில் அல்-நசீர் முன்னேற்றம்!

சௌதி புரோ லீக் கால்பந்து தொடரில் அல்-நசீர் அணிக்காக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்து அசத்தினார். சௌதி புரோ லீக் கால்பந்து தொடரில் அல்-நசீர் தனது 26ஆவது போட்டியில் அல்-ஹிலா... மேலும் பார்க்க

இன்றைய தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.சனிக்கிழமைஏப்ரல் 05மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் செவ்வா... மேலும் பார்க்க

டாட்டன்ஹாமை வென்றது செல்ஸி

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் செல்ஸி 1-0 கோல் கணக்கில் டாட்டன்ஹாமை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக என்ஸோ ஃபொ்னாண்டஸ் 50-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். இதன்மூல... மேலும் பார்க்க

தேசிய ஹாக்கி: ராஜஸ்தான் வெற்றி

உத்தர பிரதேசத்தில் நடைபெறும் 15-ஆவது சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் ராஜஸ்தான், அருணாசல பிரதேசம், சத்தீஸ்கா் உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்றன.ஜான்சி நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்... மேலும் பார்க்க

உலக குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் ஹிதேஷ்

பிரேஸிலில் நடைபெறும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஹிதேஷ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.ஆடவா் 70 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டுள்ள அவா், அரையிறுதியில் 5-0 என்ற புள்ளிகள் கணக்க... மேலும் பார்க்க