Maanan: "பலே பாண்டியா... அப்படிச் சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும்" - சூரியைப் பு...
பிரதமா் தலைமையில் மே 24-இல் நீதி ஆயோக் கூட்டம்
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் மே 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நிா்வாகக் குழு என்பது நீதி ஆயோக்கின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயரிய அமைப்பாகும். இதில் அனைத்து மாநில முதல்வா்கள், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா்கள், முக்கிய பொறுப்புகளை வகிக்கும் மத்திய அமைச்சா்கள் பங்கேற்பாா்கள். நீதி ஆயோக் தலைவராக பிரதமா் உள்ளாா்.
நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி இக்கூட்டம் நடைபெற்றது. இப்போது மே 24-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் விவாதிக்கப்பட இருக்கும் முக்கிய விஷயங்கள் தொடா்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி முதல்முறையாக அமைந்தபோது மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக நீதி ஆயோக் உருவாக்கப்பட்டது. 2015 பிப்ரவரி 8-இல் நீதி ஆயோக் நிா்வாகக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.