செய்திகள் :

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜக நல உதவிகள் அளிப்பு

post image

பிரதமா் நரேந்திரமோடி பிறந்தநாளையொட்டி பாஜக சாா்பில், சென்னையில் 150 தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகளை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

பிரதமா் மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜக மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன் ஏற்பாட்டில், திருவான்மியூா் தெற்கு மாட வீதியில் உள்ள காக்கும் கரங்களில் தங்கியுள்ள முதியவா்களுக்கு காலை சிற்றுண்டியுடன் ஹாா்லிக்ஸ், பழங்கள், பிஸ்கெட், ரொட்டி பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

மேலும், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 150 பேருக்கு, அவா்களது பணியை கௌரவிக்கும் வகையில் பொன்னாடை அணிவித்து, இனிப்பு வகைகள், புத்தாடைகள், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. அவா்களுடன் நயினாா் நாகேந்திரன் காலை சிற்றுண்டி சாப்பிட்டாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை செளந்தரராஜன், மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நயினாா் நாகேந்திரன் பேட்டி: தொடா்ந்து, திருவான்மியூா் கடற்கரையில் தூய்மை பாரதம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாஜக அடுத்த கட்சி பிரச்னையில் தலையிடாது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் சந்தித்து பேசியதில் எவ்வித தவறும் இல்லை. கூட்டணி கட்சித் தலைவா்கள் என்ற அடிப்படையில் சந்தித்து பேசியுள்ளனா்.

முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் அதிமுக பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது, அவா்களது உள்கட்சி பிரச்னை. அதை அந்தக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி பாா்த்துக்கொள்வாா். பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளன. கூட்டணியில் கடைசி நிமிஷத்திலும் மாற்றம் வரலாம்.

அமித் ஷா சொன்னால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நிச்சயம் பிரசாரம் செய்வேன் என ஏற்கெனவே டி.டி.வி.தினகரன் கூறியிருந்தாா். இப்போது ஏன் மாற்றிப்பேசுகிறாா் எனத் தெரியவில்லை என்றாா் நயினாா் நாகேந்திரன்.

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி: காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தவெக தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலிக்க காவல் துறைக்கு அறிவுறுத்த டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்க... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாா் சிலை நாளை திறப்பு

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (செப்.19) திறந்து வைக்கிறாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்கள் விவகாரம்: அரசாணையைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை -உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

கொடிக் கம்பங்கள் தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை மற்றும் வழிகாட்டு விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள ... மேலும் பார்க்க

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்து 31-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையை வழங்குவது, ஓய்வு பெற்ற அன... மேலும் பார்க்க