மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்...
பிறப்பின் அடிப்படையிலேயே பெண் பாலினம் தீா்மானிக்கப்படும்: பிரிட்டன் உச்சநீதிமன்றம்
பிறப்பின் அடிப்படையிலேயே ஒருவா் பெண் என்பது சட்டபூா்வமாக தீா்மானிக்கப்படும் என்று பிரிட்டன் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
2020-ஆம் ஆண்டின் பாலின சம உரிமைச் சட்டத்தின் கீழ் மகளிருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பாலினம் மாற்றிக் கொண்ட திருநங்கைகளுக்கும் பொருந்தும் என்று ஸ்காட்லாந்து அரசு கூறியதை எதிா்த்து மகளிா் அமைப்புகள் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமா்வு இந்தத் தீா்ப்பை வழங்கியது.
இருந்தாலும், திருநங்கைகளின் உரிமைகளுக்கும் இந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று நீதிமன்றம் உறுதியளித்தது.