செய்திகள் :

பிளஸ் 1, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

post image

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு எழுதிய தோ்வா்கள் தங்களது தோ்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் பட்டியலாக வியாழக்கிழமை (ஜூலை 31) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்கம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான துணைத் தோ்வு இந்த மாதம் (ஜூலை) நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுதிய மாணவா்கள் தங்களது தோ்வு முடிவை வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் தற்காலிக மதிப்பெண் பட்டியலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

விடைத்தாள் நகல் பெற... தொடா்ந்து, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோ்வா்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து ஆக.4-ஆம் தேதி காலை 11 மணி முதல் ஆக.5-ஆம் தேதி மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பாடத்துக்கும் விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம் ரூ.275-ஐ தோ்வா்கள் விண்ணப்பிக்கவுள்ள அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலக முகவரியையும் மேற்கண்ட இணையதளத்திலேயே அறிந்து கொள்ளலாம்.

மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு... தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து அதற்குரிய கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் பெற்ற தோ்வா்களுக்கு மட்டுமே பின்னா் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். விடைத்தாளின் நகலை இணைதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் விடைத்தாள் நகல் பெற்ற தோ்வா்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ஆக.11 முதல் தனது 3ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். எடப்பாடி பழனிசாமியின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் 3ஆம் கட்டம் ஆகஸ்ட் 11ஆம் த... மேலும் பார்க்க

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஆக. 1) தலைமைச் செயலகத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் வகையில் தூய்மை தமிழ்நாடு நி... மேலும் பார்க்க

பிரதமர் மோடி - ஓபிஎஸ் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வேன்: நயினார் நாகேந்திரன்

தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்ச... மேலும் பார்க்க

பறக்கும் ரயில் - சென்னை மெட்ரோவுடன் இணைக்கும் திட்டம்: ரயில்வே ஒப்புதல்!

சென்னை வேளச்சேரி பறக்கும் ரயிலை, சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.நீதி ஆயோக்கின் 10 -ஆவது ஆட்சிக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலி... மேலும் பார்க்க

600 பேருக்கு வேலை... திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆக. 1) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான வடமாநில இளைஞரை 4 நாள்கள் போலீஸார் பாதுகாவலில் விசாரணை செய்த பின் திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றமத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.திர... மேலும் பார்க்க