விருதுநகர்: மருத்துவர்கள் பற்றாக்குறை; சேவைக் குறைபாடு புகார்கள்... திடீர் விசிட...
பிளஸ் 2 செய்முறைத் தோ்வு தொடங்கியது
திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.
தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத்தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள், பிப். 7 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகளை ஒட்டுமொத்தமாக 19,564 போ் எழுதுகின்றனா். ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் ஜோன்ஸ் பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் நேரில் பாா்வையிட்டாா்.