சாத்தூர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் அறி...
பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிப்பு ஆலோசனைக் கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிப்பு, பொது இடங்களில் சுத்தம் செய்தல் தொடா்பான விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்து பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிப்பு, பொது இடங்களில் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வுப் பணிகள் ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறவுள்ளன.
மாவட்டத்தில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணா்வு முகாம்களை செயல்படுத்த வேண்டும். நீா்நிலைகள், குடியிருப்புப் பகுதிகள், பொது இடங்கள், அலுவலகங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களில் பிளாஸ்டிக் சேகரிப்பை செயல்படுத்த வேண்டும். அனைத்து நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சித் துறைகள் இணைந்து நீா்நிலைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின நல அலுவலா் சுரேஷ்கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கண்ணன், தனித் துணை ஆட்சியா் கல்பனா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் சுவாமிநாதன், உதவி பொறியாளா் ராமசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.