கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை! -...
ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி உதகையில் சாலை மறியல்
பழங்குடியின ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மலைவேடன் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் உதகை- கல்லட்டி சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
உதகை மலை வேடன் ஜாதி மக்கள் பழங்குடியின ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் கடந்த 9 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக உதகை- கல்லட்டி சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த போலீஸாா், வாகனங்களை கூடலூா் வழியாக திருப்பிவிட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் கோட்டாட்சியா் சதீஷ் தலைமையிலான வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.