செய்திகள் :

பீலா வெங்கடேசன் மறைவு: ``பெருந்தொற்றுக் காலத்தில்'' -முதல்வர் ஸ்டலின், எடப்பாடி பழனிசாமி இரங்கல்

post image

இந்திய நிர்வாகப் பணி (ஐஏஎஸ்) அதிகாரி பீலா வெங்கடேசன் (56), நீண்ட காலமாக மூளைக் கட்டியுடன் போராடி வந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 24 புதன்கிழமை) காலமானார். இவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் திருமிகு. பீலா வெங்கடேசன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அடிப்படையில் மருத்துவரான பீலா வெங்கிடேசன் அவர்கள், இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகி பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளராகப் பணியாற்றிய அனுபவமிக்கவர்.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத் துறைச் செயலாளராகப் பணியாற்றியவர். மேலும், பல பெரும் பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்த அவரது அகால மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில்,

``தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். பீலா வெங்கடேசன் இ.ஆ.ப. அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை 'பிச்சைக்காரன்' என்று இழிவுபடுத்துவதா" - செல்வப்பெருந்தகை

எடப்பாடி பழனிசாமியும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் விசுவாசமாக உள்ளாரா? அதிமுகவை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் ம... மேலும் பார்க்க

Beela Venkatesan: அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்!

அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார். இவருக்கு வயது 56. முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி எல். வெங்கடேசனுக்கும், சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை விதிகள் தளர்வு: "விண்ணப்பித்தவர்களுக்கு ஓரிரு மாதங்களில் வழங்கப்படும்" - உதயநிதி

விருதுநகர் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற விழாவில் 5 கோடியே 79 லட்சத்து 50 ஆயிரத்து 543 ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டா 400 பேருக்கும், 1 கோடியே 4 லட்சத்து 32 ஆயிரத்து 80 ரூபாய் மதிப்... மேலும் பார்க்க

GST 2.0: பால் முதல் கார் வரை - பொருட்களின் விலை குறைந்துள்ளனவா? நீங்களே களநிலவரத்தைச் சொல்லுங்கள்!

இந்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்துள்ளது.இம்மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய ஜிஎஸ்டி விதிகளால் அத்தியாவசி... மேலும் பார்க்க

``UP-க்கு ரூ.37,000 கோடி வருவாய் உபரி; TN-க்கு ரூ.36,000 கோடி வருவாய் பற்றாக்குறை'' - CAG அறிக்கை

2022-23 நிதியாண்டுக்கான மாநிலங்களின் பொருளாதாரச் செயல்திறன் குறித்து இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கை (CAG) அறிக்கை வெளியாகியிருக்கிறது. இதில், அதிக வருவாய் உபரி கொண்ட மாநிலங்கள் பட்டியலில் உத்தரப்பிரத... மேலும் பார்க்க

Amit Shah: ``மோடியிடம் பிடித்த குணம், விடுமுறை எடுக்காதவர், வரலாறு காணாத பிரதமர்'' - அமித் ஷா பேட்டி

மோடியும், அமித் ஷாவும் பாஜகவின் இரட்டைப் பெரும் தூண்கள். பிரதமராக மோடி வலம் வர, கட்சியின் தேசியப் பிரச்னையிலிருந்து, உள்ளூர் உட்கட்சிப் பிரச்சனை வரை பஞ்சாயத்து பண்ணி அடுத்தடுத்த வெற்றிக்காக கூட்டணியைக... மேலும் பார்க்க