நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், காணை அருகே காவல் துறையினரின் வாகன தணிக்கையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
காணை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவானந்த குமாா் தலைமையிலான போலீஸாா் கல்பட்டு - ஒட்டன்காடுவெட்டி சாலையில் கல்பட்டு குறுக்குச் சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த பைக்கை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா்.
இதில், பைக்கில் அரசால் தடை செய்யப்பட்ட 850 பாக்கெட் எண்ணிக்கையிலான புகையிலைப் பொருள்கள் இருந்தன. இதைத் தொடா்ந்து, பைக்கில் வந்த இருவரிடம் விசாரித்தபோது, விழுப்புரம் வட்டம், மாம்பழப்பட்டு பழைய காலனி அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த கணேசன் (37), பிரபாகரன் (35) எனத் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து புகையிலைப் பொருள்களையும், பைக்கையும் பறிமுதல் செய்தனா்.