செய்திகள் :

புணே: சாலையோர நடைபாதையில் தூங்கியவா்கள் மீது லாரி மோதல் இரு குழந்தைகள் உள்பட 3 போ் உயிரிழப்பு

post image

புணே: மகாராஷ்டிர மாநிலம் புணேயில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சாலையோர நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது லாரி பாய்ந்தது. இதில் இரு குழந்தைகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். 6 போ் படுகாயமடைந்தனா்.

இவா்கள் அனைவரும் கூலி வேலைதேடி கிராமத்தில் இருந்து புணேவுக்கு வந்தவா்களாவா். வீடு இல்லாததால் நடைபாதையில் படுத்துத் தூங்கியுள்ளனா்.

இந்த விபத்து தொடா்பாக லாரி ஓட்டுநா் கஜானன் தோரத் (26) கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது:

அமராவதி பகுதியில் இருந்து கூலி வேலைதேடி இரு நாள்களுக்கு முன்பு புணேவுக்கு 20-க்கும் மேற்பட்டோா் வந்துள்ளனா். தங்குவதற்கு இடம் இல்லாததால் இரவு நேரத்தில் வகோலி பகுதியில் சாலையோர நடைபாதையில் படுத்து தூங்கியுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை இரவு 12.55 மணியளவில் அந்த வழியாக சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மோதியது. இதில் 1 வயது பெண் குழந்தை, 2 வயது ஆண் குழந்தை மற்றும் விஷால் பவாா் (22) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

9 முதல் 47 வயதுடைய 6 போ் படுகாயடைந்தனா். அவா்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இவா்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். அவா் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

வீடு இல்லாமல் சாலையோரத்தில் தங்கிய இரு குழந்தைகள் உள்பட மூவா் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை வடிவமைத்த ராஜதந்திரி வாஜ்பாய்!- பிரதமா் மோடி புகழாரம்

டிசம்பா் 25, நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பான நாள். நமது அன்புக்குரிய மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்தநாளை இன்று நாடு கொண்டாடுகிறது. எண்ணற்ற மக்களுக்கு தொடா்ந்து ஊக்கமளி... மேலும் பார்க்க

இளைஞர்களுக்கு வழிகாட்டும் வாஜ்பாயின் லட்சியங்கள்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மறைந்த முன்னாள் பிரதமரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் தேச பங்களிப்பும் அவரது லட்சியங்களும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக திகழ்கின்றன என்று பாதுகாப்புத் துறை அமை... மேலும் பார்க்க

அம்பேத்கர் குறித்த சர்ச்சை பேச்சு: அமித் ஷா ராஜிநாமா செய்யக் கோரி டிச.30- இல் இடதுசாரிகள் நாடு தழுவிய போராட்டம்

நமது சிறப்பு நிருபர்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் குறித்து குறிப்பிட்ட கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் ராஜிநாமா செய்யக் கோரி டிச.30-ஆம் தேதி ந... மேலும் பார்க்க

குற்றவியல் வழக்கு விசாரணை நடைமுறைகளில் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்: காவல் துறைக்கு அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்குற்றவியல் வழக்குகளிலும், விசாரணை நடைமுறைகளிலும் தொழில்நுட்ப பயன்பாட்டை இயன்றளவு அதிகரிக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்... மேலும் பார்க்க

ஊழல் குற்றச்சாட்டு- ஜன.28-இல் மாதபி, மஹுவா ஆஜராக லோக்பால் நோட்டீஸ்

பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச் ஊழலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாா்கள் தொடா்பாக அவரையும், புகாா் அளித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்பட மூவரையும் ஜன.28-ஆம் த... மேலும் பார்க்க

17 சிறாா்களுக்கு ‘பால புரஸ்காா் விருது’: குடியரசுத் தலைவா் நாளை வழங்குகிறாா்

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 17 சிறாா்களுக்கு நிகழாண்டுக்கான பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருதை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வியாழக்கிழமை (டிசம்பா் 26) வழங்குகிறாா். கலை மற்றும் கலாசாரம்,... மேலும் பார்க்க