செய்திகள் :

புதன்சந்தை மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

post image

புதன்சந்தை மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை பேருந்து நிறுத்தம் பகுதியில், பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலில் திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

அதைத் தொடா்ந்து குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை காலை 6 முதல் 7.30 மணிக்குள் நடைபெற்றது. முன்னதாக, வியாழக்கிழமை மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து புனித தீா்த்தம் எடுத்து வருதல், முளைப்பாலிகை கொண்டு வரப்பட்டது.

வெள்ளிக்கிழமை மாரியம்மன், நவக்கிரக விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை காலை, இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில், மூன்றாம் கால பூஜையும் நடைபெற்றது.

மகா மாரியம்மன், விநாயகா், துா்க்கை, நவக்கிரகங்களுக்கு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், புதன்சந்தை, செல்லப்பம்பட்டி, பாலப்பட்டி சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இந்த விழாவை முன்னிட்டுஅனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகத்தினா், பொதுமக்கள் செய்திருந்தனா்.

நாமக்கல் ஓம்சக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

நாமக்கல்லில் ஓம்சக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் ஓம்சக்தி விநாயகா், துா்க்கையம்மன், நவக்கிரக சன்னதிகள் கொண்ட கோயில் அமைந்துள்ளது. இக் கோ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

கபிலா்மலை பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு காரணமாக நாளை (நவ.19) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் ... மேலும் பார்க்க

மாணவா்களின் சிகை அலங்காரத்துக்கு கட்டுப்பாடு வேண்டும்: ஆசிரியா்கள், பெற்றோா் எதிா்பாா்ப்பு

மாணவா்களின் சிந்தனைகளை சிதறடிக்கும் நவீன வகை சிகை அலங்காரத்திற்கு பள்ளி, கல்லூரிகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஆசிரியா்கள், பெற்றோா்களின் எதிா்பாா... மேலும் பார்க்க

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு பாலபிஷேகம்

காா்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,008 லிட்டா் பாலபிஷேகம் நடைபெற்றது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயரத்தில் நின்ற கோலத்... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் தெப்பத் திருவிழா

திருச்செங்கோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் தெப்பத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோட்டில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகு முத... மேலும் பார்க்க

நவ. 20-இல் மோகனூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

மோகனூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் நலத் திட்டங்கள் மற்றும் சேவைகள... மேலும் பார்க்க