செய்திகள் :

புதின் பேச்சுக்கு வராவிட்டால் கூடுதல் பொருளாதாரத் தடை: டிரம்ப்

post image

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக திங்கள்கிழமை பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

இந்த நிலையில், உக்ரைன் போர் குறித்து செய்தியாளர்களுடன் செவ்வாய்க்கிழமை பேசிய டிரம்ப், ரஷிய அதிபர் புதினை எந்த நேரத்திலும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும், அவர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க : 18,000 இந்தியா்கள் நாடு திரும்புவாா்கள்?: அமெரிக்க அதிபா் டிரம்ப் கட்டுப்பாடு எதிரொலி

மேலும், ரஷியா - உக்ரைன் போர் குறித்து டிரம்ப் பேசியதாவது:

“போர் ஒருபோதும் தொடங்கி இருக்கக் கூடாது. திறமையான அதிபர் இருந்திருதால் போர் நடந்திருக்காது. நான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைனில் ஒருபோதும் போர் நடந்திருக்காது.

நான் அதிபராக இருந்திருந்தால் ரஷியா போருக்கு சென்றிருக்காது. புதினுடன் எனக்கு மிக வலுவான புரிதல் இருந்தது. மக்களை அவமதித்த பைடனை புதின் அவமதித்தார்.

பைடனை எந்த நேரத்திலும் சந்திக்கத் தயார். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள், இது ஒரு கொடூரமான சூழல். பெரும்பாலானோர் ராணுவ வீரர்களாக மாறிவிட்டார்கள். நகரங்கள் இடிந்த இடங்களாக காணப்படுகிறது.

உக்ரைனில் அறிவிக்கப்பட்டதைவிட அதிகளவிலான மக்கள் பலியாகியுள்ளனர். உண்மையான எண்ணிக்கையை வெளியிடாததற்கு உங்களை குறை சொல்லவில்லை, வெளியிட விரும்பாத அரசை குறை கூறுகிறேன்.

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதம் அளிக்கப்படுமா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. புதினுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.

அமைதியை விரும்புவதாக உக்ரைன் அதிபர் என்னிடம் கூறினார். இரு தரப்பினரையும் எந்த நேரத்திலும் சந்திப்பேன். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதை தடுக்க விரைவில் முடிவு காண விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பிறப்புரிமைக் குடியுரிமை ரத்து முடிவுக்கு எதிராக 22 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு!

அமெரிக்காவில் வெளிநாட்டவருக்குப் பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படும் பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவை எதிர்த்து 22 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு தொடர... மேலும் பார்க்க

திறமையானவர்கள் அமெரிக்கா வருவது பிடிக்கும்! எச்-1பி விசா குறித்து டிரம்ப்!

திறமையானவர்கள் அமெரிக்காவுக்கு வருவதை தான் விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, அமெரிக்கா்களுக்கு வேலைவாய்ப்புகள் அத... மேலும் பார்க்க

இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விருப்பம்: ஐரோப்பிய யூனியன் தலைவா்

டாவோஸ்: ‘உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்புகிறேன்’ என ஐரோப்பிய யூனியன் தலைவா் உா்சுலா வான்டொ்லீயென் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். மேலும் தனது இரண்டாவது பதவிக்காலத்த... மேலும் பார்க்க

மேற்குக் கரை: ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல்

ரமல்லா: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்புடன் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலும், மேற்குக் கரை பகுதியிலுள்ள ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடவடிக்கையில் ... மேலும் பார்க்க

சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தைவானில் 27 போ் காயம்

தைபே: தைவானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 27 போ் காயமடைந்தனா்; சில இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்தன. ரிக்டா் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவான அந்த நிலநடுக்கம், சியாயி மாவட்டத... மேலும் பார்க்க

இந்தோனேசியா: மழை வெள்ளத்தில் 17 போ் உயிரிழப்பு

ஜகாா்த்தா: இந்தோனேசியாவின் முக்கியத் தீவான ஜாவாவில் திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 17 போ் உயிரிழந்தனா். மழையால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு கரைகளை உடைத... மேலும் பார்க்க