செய்திகள் :

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

post image

கயல் தொடர் நாயகி சைத்ரா ரெட்டி நடிக்கும் புதிய இணையத் தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சின்ன திரை நடிகைகளில் மக்கள் மனதைக் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி, கன்னட தொடர்களில் நடித்து, பின்னர் தமிழில் அறிமுகமானார்.

இவர் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து யாரடி நீ மோகினி தொடரிலும் இவர் நடித்திருந்தார். வெள்ளித் திரையில் அஜித்தின் வலிமை படத்தில் சைத்ரா நடித்திருக்கிறார்.

தற்போது, இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அதிலும் இத்தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடித்துவரும் கயல் தொடர், டிஆர்பியில் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், நடிகை சைத்ரா ரெட்டி சரிகம நிறுவனம் தயாரிக்கும் புதிய இணையத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இத்தொடரில் குரு லட்சுமணன் நாயகனாக நடிக்கிறார். இந்தத் தொடருக்கு லவ் ரிட்டர்ன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் குரு லட்சுமணன் யூடியூப்பில் குறும்படங்களிலும், படத்தில் சிறிய பாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் நடித்த ஹார்ட் பீட், ஆஃபீஸ் இணையத் தொடர்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

தற்போது, குரு லட்சுமணனுடன் நடிகை சைத்ரா இணைந்துள்ள புதிய இணையத் தொடர் வெளியீடு குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ள நிலையில், வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லவ் ரிட்டர்ன்ஸ் இணையத் தொடர், திருமணமான நாயகன் வாழ்க்கையில் முன்னாள் காதலி திரும்பவும் வருகிறார். முன்னாள் காதலி மற்றும் மனைவியை நாயகன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை நகைச்சுவைக் கலந்து எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தொடரில் பர்வீன், பேபி லிதன்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சதாசிவம் செந்தில்ராஜன், அர்ஜுன் டிவி ஆகியோர் இயக்குகிறார்கள்.

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

பாக்கியலட்சுமி தொடரில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை சுசித்ரா, தற்போது புதிய தொடரில் நடிக்கவுள்ளார். இந்தத் தொடர், அவரின் தாய்மொழியான கன்னடத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.வங்க மொழியில் உருவான ஸ்ரீமோயி என்ற தொட... மேலும் பார்க்க

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

சின்ன திரை நடிகை ஜீவிதா குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். வழக்கமாக நண்பர்களுடன் இருக்கும் நாள்களை புகைப்படங்களாக பதிவிடும் ஜீவிதா, பிறந்தநாளை தனது குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடியுள்ளார். ... மேலும் பார்க்க

ஷாருக்கான் சிறந்த நடிகரா? தேசிய விருதுக் குழுவை விளாசிய ஊர்வசி!

சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற ஊர்வசி தன் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுகான தேசிய விருதுகள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த 71-வது ... மேலும் பார்க்க

துல்கர் சல்மான் - 41 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் ஐயம் ... மேலும் பார்க்க

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!

கரூர்: கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை கோ... மேலும் பார்க்க

அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் இயக்கவுள்ள இயக்குநர் பற்றி தெரியுமா?

ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத் தொடரின் தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. விஷ்ணுவின் தசாவதாரங்களில் (பத்து அவதாரங்கள்) ஒன்றான நரசிம்ம அவதாரத்தை மையமாக வைத்து கடந்த ஜூன் 25 ஆம் தே... மேலும் பார்க்க