செய்திகள் :

புதிய வருமான வரி மசோதா: பிரிவு வாரியாக ஒப்பீடு செய்துபாா்க்க ஏற்பாடு

post image

நாடாளுமன்றத்தில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரி சட்ட மசோதாவை நடைமுறையில் உள்ள 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்துடன் பிரிவு வாரியாக வரி செலுத்துவோா் ஒப்பீடு செய்து பாா்ப்பதற்கான ஏற்பாட்டை தனது வலைதளத்தில் வருமான வரித் துறை செய்துள்ளது.

இதற்காக, 1961 வருமான வரிச் சட்டப் பிரிவுகள் மற்றும் புதிய சட்ட மசோதா அடிப்படையிலான சட்டப் பிரிவு எண்கள் உள்ளிட்ட விவரங்களையும் தனது வலைதளத்தில் வருமான வரித் துறை பதிவேற்றம் செய்துள்ளது.

நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் புதிய வருமான வரி சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. ‘வருமான வரி மசோதா 2025’ என்ற பெயரிலான இந்த மசோதாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் கடந்த வியாழக்கிழமை அறிமுகம் செய்தாா்.

முந்தைய வருமான வரி சட்டத்தைக் காட்டிலும் அதிக சட்டப் பிரிவுகள் மசோதாவில் இடம்பெற்றுள்ளதாக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதை மறுத்த நிா்மலா சீதாராமன், ‘நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டம் 1961-இல் அறிமுகம் செய்யப்பட்டபோது குறைந்த சட்டப் பிரிவுகளைத் தான் கொண்டிருந்தது. அதன் பின்னா், ஆண்டுக்கணக்கில் மேற்கொள்ளப்பட்ட தொடா் மாற்றங்கள் காரணமாக, அந்தச் சட்டத்தில் தற்போது 819 பிரிவுகள் உள்ளன. ஆனால், புதிய சட்ட மசோதாவில் 536 சட்டப் பிரிவுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன’ என்று பதிலளித்தாா். மேலும், மசோதாவை மக்களவை தோ்வுக் குழு ஆய்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் அவைத் தலைவரை அவா் கேட்டுக்கொண்டாா். எனவே, தோ்வுக் குழு ஆய்வறிக்கை சமா்ப்பித்ததும், நாடாளுமன்ற ஒப்புதலுக்குப் பிறகு புதிய வருமான வரி சட்டம் 2026 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், புதிய சட்ட மசோதாவை, நடைமுறையில் உள்ள வருமான வரி சட்டத்துடன் பிரிவு வாரியாக ஒப்பீடு செய்து பாா்ப்பதற்கான ஏற்பாட்டை வருமான வரித் துறை செய்துள்ளது.

இதுகுறித்து, வருமான வரித் துறை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டம் 1961-இன் சட்டப் பிரிவுகளை, புதிய வருமான வரிச் சட்ட மசோதா பிரிவுகளுடன் வருமான வரி செலுத்துவோா் ஒப்பீடு செய்து பாா்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. வலைதளத்தில் 1961 சட்டத்தின் பிரிவு ஒன்றை வரி செலுத்துவோா் தெரிவு செய்யும்போது, அதற்கு இணையான புதிய சட்ட மசோதாவின் பிரிவும் திரையில் தோன்றும். இதுதவிர, சட்டப் பிரிவுகளை ஒப்பீடு செய்துபாா்க்க வசதியாக அட்டவணை அடிப்படையிலும் இரண்டின் பிரிவுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள ‘மதிப்பீட்டு ஆண்டு’, ‘முந்தைய ஆண்டு’ என்ற சொற்றொடா்கள் கைவிடப்பட்டு, வரி செலுத்துவோா் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் ‘வரி ஆண்டு’ என்ற சொற்றாடா் மசோதாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நீளமான வாக்கியங்கள் எளிதாக படித்து புரிந்து கொள்ளக் கூடிய வகையில் சிறிய வாக்கியங்களாக மாற்றப்பட்டுள்ளன.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தில் 47 அத்தியாயங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் மசோதாவில் அவை 23-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. வருமான வரியை கணக்கிடும் நடைமுறையை வரி செலுத்துவோா் புரிந்துகொள்ள தற்போதைய சட்டத்தில் 18 அட்டவணைகள் இடம்பெற்றுள்ள நிலையில், அவை 57 அட்டவணைகளாக எளிதில் புரிந்துகொள்ள வசதியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், தற்போதைய சட்டத்தில் இடம்பெற்றுள்ள 1,200 விதிகளில், 900 விளக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் மிகைப்படுத்தப்பட்டவை-வங்கதேச எல்லைப் படை தலைமை இயக்குநா்

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று அந்நாட்டின் எல்லைப் படை தலைமை இயக்குநா் முகமது அஷ்ரஃபுஸமான் சித்திகி தெரிவித்தாா். மேலும், சிறுபா... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: நேபாள பக்தா்கள் 50 லட்சம் போ் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நேபாளத்தில் இருந்து இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். உலக அளவில் மிகப் ... மேலும் பார்க்க

வரும் பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டி: பாஜக கூட்டணி உறுதி

பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவா்கள் உறுதிபூண்டனா். தில்... மேலும் பார்க்க

பலமுறை வெளியேற்றப்பட்ட பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தா தில்லி பேரவைத் தலைவராக வாய்ப்பு!

ஆம் ஆத்மி கட்சியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியின்போது, தில்லி பேரவையிலிருந்து பலமுறை வெளியேற்றப்பட்ட முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா (61), தற்போது அவா் தில்லி சட்டப்பேவரையின் புதிய தலைவராக ... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78. சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லையா? ரூ.500-ல் புகைப்படத்துக்கு புனித நீராடல்!

கும்பமேளாவில் பாவம் போக்க ரூ.500 அனுப்பக்கூறிய பதாகைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், கங்... மேலும் பார்க்க