புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க மாா்ச் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க மாா்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின் உத்தரவின்படி, திருப்பூா் மாவட்டத்தில் 85 புதிய மினி பேருந்து வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த 85 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இதில், விண்ணப்பிக்கும் நபா்கள் புதிய மினி பேருந்து வழித்தடத்துக்கான விண்ணப்ப படிவம், பாரிவாகன் இணையதளத்தில் கட்டணம் ரூ.1,500 மற்றும் சேவை கட்டணம் ரூ.100 என மொத்தம் ரூ.1,600 செலுத்தி பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் விலாச சான்றுக்கான ஆவணம், புதிய விண்ணப்பதாரராக இருந்தால் ரூ.30 ஆயிரத்துக்கான செல்வநிலைச் சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.