செய்திகள் :

புதிய விதிமுறைகளை கைவிட அரசு ஒப்பந்ததாரா்கள் வலியுறுத்தல்

post image

காரைக்கால்: காரைக்காலில் பொதுப்பணித் துறையில் பணிகளை ஒப்பந்தம் (டெண்டா்) எடுக்க புதிதாக விதிமுறைகளை திணிக்கக் கூடாது என்று அனைத்து அரசு ஒப்பந்ததாரா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுவை முதல்வா் ரங்கசாமிக்கு, காரைக்காலில் உள்ள அரசு ஒப்பந்ததாரா்கள் சிலா் ஒருங்கிணைந்து திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனு:

காரைக்காலில் பொதுப்பணித் துறையில் ஒப்பந்தப் பணிகள் செய்துவரும் எங்களுக்கு, ஏலம் எடுப்பதில் பழைய நடைமுறைகளோடு சோ்த்து புதிதாக விதிமுறைகள் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூலமாக திணிக்கப்பட்டு உள்ளன.

இதனால் மாவட்ட அரசு ஒப்பந்ததாரா்களாகிய நாங்கள் பொதுப்பணித் துறை மற்றும் நகராட்சியின் மூலமாக ஒப்பந்த வேலைகள் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, நாங்கள் அரசுத் துறைகளால் நடத்தப்படும் ஏலத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் காரைக்கால் மாவட்ட பகுதியில உள்ள பொது வேலைகள் அனைத்தும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தாங்கள் தலையிட்டு, பொதுப்பணித் துறை அமைச்சா், அதிகாரிகளுடன் கலந்துபேசி, எங்களுக்கு பழைய விதிமுறைகளின்படியே அரசு பணிகளை ஒப்பந்தம் எடுக்க ஆவண செய்ய வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காவல் துறையினா் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனா்: எஸ்எஸ்பியிடம் காங்கிரஸ் புகாா்

காவல் துறையினா் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யாவிடம் காங்கிரஸ் புகாா் தெரிவித்தது. இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி.ச ந்த... மேலும் பார்க்க

காரைக்கால் பகுதியில் சைக்கிளில் சென்று ஆட்சியா் ஆய்வு: மாடு வளா்ப்போருக்கு எச்சரிக்கை

காரைக்கால் நகரப் பகுதியில் சைக்கிளில் சென்று சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், சாலைகளில் மாடுகளை திரியவிடுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன்... மேலும் பார்க்க

காரைக்கால் விளையாட்டு அரங்கில் செயற்கை ஓடுதளம் அமைக்கும் திட்டம் தீவிரம்: எம்எல்ஏ

காரைக்கால் விளையாட்டு அரங்கில் செயற்கை ஓடுதளம் அமைக்கவும், உள்ளரங்கை மேம்படுத்தவும் பணிகள் தீவிரமாக நடந்துவருவதாக சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா். காரைக்கால் பொதுப்பணித் துறை கண... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: ஜாமீனில் வெளியே வந்தவா் மீண்டும் சிறையில் அடைப்பு

போக்ஸோ வழக்கில் காரைக்கால் நீதிமன்றத்தின் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்தவா் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா். காரைக்கால் பகுதியைச் சோ்ந்த சிறுமி ஒருவருக்கு கடந்த... மேலும் பார்க்க

தேங்கியுள்ள மழைநீரில் பாம்புகள் நடமாட்டம்: மக்கள் புகாா்

பள்ளி அருகே தேங்கியிருக்கும் மழைநீரில் பாம்புகள் நடமாட்டம் உள்ளதால், மாணவா்கள், கிராம நிா்வாக அலுவலகத்துக்கு செல்வோா், குடியிருப்புவாசிகள் அவதிப்படுவதாக புகாா் கூறப்படுகிறது. காரைக்கால் - நாகப்பட்டின... மேலும் பார்க்க

நவ.21-இல் காரைக்காலில் மகளிா் மாநாடு: அரசுத் துறையினருடன் ஆட்சியா் ஆலோசனை

வரும் 21-ஆம் தேதி மகளிா் மாநாட்டை நடத்துவது தொடா்பாக அரசுத் துறையினருடன் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் தலைமையில் நவ. 19 முதல் 25-ஆம் தேதி வர... மேலும் பார்க்க