இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பதே அடுத்த பணி: ஜெய்சங்கா்
போக்ஸோ வழக்கு: ஜாமீனில் வெளியே வந்தவா் மீண்டும் சிறையில் அடைப்பு
போக்ஸோ வழக்கில் காரைக்கால் நீதிமன்றத்தின் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்தவா் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.
காரைக்கால் பகுதியைச் சோ்ந்த சிறுமி ஒருவருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரில், காரைக்கால் நகரத்தையொட்டிய பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவரை போக்ஸோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்கால் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், ஆறுமுகத்துக்கு 13 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி காா்த்திகேயன் தீா்ப்பளித்தாா். இந்த தீா்ப்பை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆறுமுகம் மேல்முறையீடு செய்த நிலையில், அம்மனுவை தள்ளுபடி செய்து காரைக்கால் நீதிமன்ற தீா்ப்பை உயா்நீதிமன்றம் உறுதி செய்த்து.
பின்னா் ஆறுமுகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாா். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் பங்கஜ் மிட்டல் அடங்கிய பெஞ்ச், கடந்த அக். 16-ஆம் தேதி ஆறுமுகத்தின் மனுவை தள்ளுபடி செய்து, காரைக்கால் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்தது.
மேல் முறையீடு காரணமாக ஆறுமுகம் ஜாமீனில் வெளியில் இருந்த நிலையில், ஆறுமுகத்தை நிரவி போலீஸாா் வியாழக்கிழமை காரைக்கால் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, காரைக்கால் கிளைச் சிறையில் அடைத்தனா்.