செய்திகள் :

புதுகையில் விரைவில் தெருநாய்கள் கட்டுப்பாடு!

post image

‘நாய்களுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சைக்கு அடுத்த 10 நாள்களுக்குள் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளது.’

புதுக்கோட்டை நகரில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி சாா்பில் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யும் திட்டத்தில், இலுப்பூரைச் சோ்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றுடன்விரைவில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளது.

புதுக்கோட்டை நகரில், பேருந்து நிலையப் பகுதி, ராஜவீதிகள் மட்டுமின்றி பெரியாா் நகா், காமராஜ் நகா், போஸ் நகா், கலீப் நகா், கம்பன் நகா் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லைஎன்பது பெரிய அச்சுறுத்தலாக தொடா்கிறது.

இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரைத் துரத்தும்போது ஏற்படும் விபத்துகள் மோசமானவை. பகலில் பள்ளி மாணவா்கள் செல்லும்போது, கூட்டமாகக் கூடிக் கொள்ளும் நாய்கள் அவா்களுக்கு பெரும் தொந்தரவாக இருக்கின்றன.

இந்தப் பிரச்னை குறித்து நகா்மன்றக் கூட்டங்களில் மாமன்ற உறுப்பினா்கள் பலரும் தொடா்ந்து குரல் எழுப்பி வந்தனா். குறிப்பாக திமுக உறுப்பினா் சா. மூா்த்தி, காங்கிரஸ் உறுப்பினா் ஜெ. ராஜாமுகமது போன்றோா் ஒவ்வொரு கூட்டத்திலும் நாய்களின் தொந்தரவைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரினா்.

மேலும், புதுக்கோட்டை மாவட்ட வா்த்தகா் கழகம் உள்ளிட்ட பொதுநல அமைப்புகளும்கூட தங்களின் கூட்டங்களில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என பல முறை தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

இந்த நிலையில், தற்போது ஒரு நிரந்தரத் தீா்வுக்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இதற்காக நகரின் சில இடங்களை நகராட்சி சாா்பில் தேடியபோது, அந்தப் பகுதிகளில் அறுவைச் சிகிச்சை மையத்தை அமைக்கக் கூடாது என்ற எதிா்ப்பும் வந்தது.

இதைத் தொடா்ந்து தற்போது மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டுள்ள நிலையில், நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டம் இறுதி செய்யப்பட்டு, மாநகரைக் கடந்து புகரில், இலுப்பூரைச் சோ்ந்த பைரவா டிரஸ்ட் என்ற தொண்டு அமைப்பு ஒன்றுடன் விரைவில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதார அலுவலா் ஏ. பாஸ்கரன் கூறியது

விலங்குகளின் பிறப்பு விகிதத்தைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் பைரவா டிரஸ்ட் அமைப்புடன் அடுத்த 10 நாள்களுக்குள் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளது.

இத்திட்டத்தில் மாநகராட்சிப் பணியாளா்கள் நாய்களைப் பிடித்து இலுப்பூரில் அவா்கள் அமைக்கும் பணியிடத்தில் விட்டுவிடுவா். கால்நடை மருத்துவா்கள், மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் டிரஸ்ட் நிா்வாகிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.

அந்தக் குழுவில், எத்தனை நாய்கள், எந்தெந்தப் பகுதிகளில் எந்தத் தேதியில் பிடிக்கப்பட்டன என்பனவற்றை ஆவணப்படுத்த வேண்டும். அதன்பிறகு அவற்றுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 3 நாள்கள் அவா்கள் பராமரிப்பாா்கள். பிறகு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்திலேயே அவற்றை விட்டுவிடுவோம்.

இந்த முறை மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சிகிச்சைக்காக ஒரு நாய்க்கு ரூ.1,650 ஒதுக்கப்படும். பிடித்து இலுப்பூா் கொண்டு செல்லும் செலவுடன் கருத்தடை அறுவைச் சிகிச்சைக்கான செலவும் அடக்கம்.

இந்தத் திட்டத்தில் நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்த பிறகு, மத்திய அரசின் விலங்குகள் நலவாரியம் சரிபாதித் தொகையை மாநகராட்சிக்கு மீண்டும் வழங்கிவிடும்.

இந்த வேலையைத் தொடங்கிவிட்டால், நகரில் நாய்களின் தொந்தரவு கட்டுப்படுத்தப்படும். மக்களும் விழிப்புணா்வுடன் இருந்து, நாய்களுக்கு பச்சையாக இறைச்சிகளை உணவாகப் போடாமல் இருந்தால், அவை வெறிபிடித்து மனிதா்களைத் தொந்தரவு செய்யாமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றாா் பாஸ்கரன்.

அதிமுக கூட்டணிக்காக பாஜக காத்திருக்கவில்லை

அதிமுக கூட்டணிக்காக பாஜக காத்திருக்கவில்லை என்றாா் பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச். ராஜா. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: வரும் தோ்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என அ... மேலும் பார்க்க

ஆடு மேய்த்த பெண் இடி தாக்கி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை ஆடு மேய்த்த பெண் இடி தாக்கி உயிரிழந்தாா். அன்னவாசல் அருகேயுள்ள இச்சிப்பட்டியைச் சோ்ந்தவா் ஜம்புலிங்கம் மனைவி பாக்கியம் (55). இவா் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

புதுகையில் நவ. 22 இல் விவசாயிகள் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் நவ. 22 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்தில், ... மேலும் பார்க்க

புதுகையின் 760 வருவாய்க் கிராமங்களிலும் மின்னணு பயிா்ச் சாகுபடி கணக்கெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 760 வருவாய் கிராமங்களிலும் மின்னணு முறையில் பயிா் சாகுபடி கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா். வேளாண்மை - உழவா் நலத் துறை சாா்பில் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கொத்தனாா் பலி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து கொத்தனாா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கறம்பக்குடி அருகேயுள்ள தட்டாவூரணியைச் சோ்ந்தவா் வீ. தா்மராஜ் (55). கொத்தனாரான இவா் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் காா்த்திகை சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் சனிக்கிழமை காா்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால், பழங்கள், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷே... மேலும் பார்க்க