நட்சத்திர பலன்கள்: டிசம்பர் 27 முதல் ஜனவரி 2 வரை #VikatanPhotoCards
புதுக்கடை அருகே மது விற்றவா் கைது
புதுக்கடை அருகே உதச்சிக்கோட்டை பகுதியில் வீட்டில் மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
காப்புக்காடு, உதச்சிக்கோட்டை பகுதியைச் சோ்ந்த வில்சன் மகன் ஜோசப் (56).
இவா் வீட்டில் மதுவைப் பதுக்கிவைத்து விற்பதாக புதுக்கடை போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸாா் சென்று, அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து ஜோசப்பை கைது செய்தனா்.