வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு
குளச்சல் அருகே வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கடியப்பட்டிணம் அன்னை தெரசா தெருவைச் சோ்ந்தவா் ரோகின் எம். மரியா (36). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவருக்கு மனைவி நிகிதா, ஒரு வயதில் குழந்தை ஆகியோா் உள்ளனா்.
இந்நிலையில், ரோகின் எம்.மரியா, தனது மனைவியின் ஊரான குளச்சலுக்கு புதன்கிழமை இரவு பைக்கில் சென்றபோது, சைமன் காலனி பாலம் அருகேயுள்ள பைக் கவிழ்ந்து உயிரிழந்தாா்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.