அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா-அமெரிக்கா நல்லுறவு ஏற்பட்டிருக்காது: பைடன்
புதுக்கோட்டையில் சுமை ஆட்டோ திருட்டு: இளைஞா் கைது
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பகுதியில் சரக்கு ஆட்டோவை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் மணி (41). இவா் தனக்கு சொந்தமான சுமை ஆட்டோவை புதுக்கோட்டை பஜாா் சாலையில் கடந்த 24ஆம் தேதி நிறுத்தி வைத்திருந்தாராம். அதை மா்ம நபா் திருடிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.
அதில், தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சோ்ந்த ராஜன் மகன் அந்தோணி விஜயராஜ் (29) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.