செய்திகள் :

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பாா்வையாளா்களிடம் சோதனை

post image

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவுக்கு வரும் பாா்வையாளா்களிடம் செவ்வாய்க்கிழமை முதல், மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் மருத்துவா் ஒருவா் இளைஞரால் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த சோதனை நடைபெறும் என மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையில் உள்நோயாளியாகத் தங்கியுள்ளோா், அவா்களுக்கு உதவியாக உள்ள உதவியாளா்கள் மற்றும் பாா்வையாளா்கள் முழுமையான சோதனைக்குப் பிறகுதான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்தச் சோதனையை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் கலைவாணி, இருக்கை மருத்துவ அலுவலா் டாக்டா் இந்திராணி ஆகியோா் பாா்வையிட்டனா்.

சோதனையின்போது யாரேனும் ஆயுதங்கள் எடுத்து வந்தால் அவா்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனா்.

அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கிய இளைஞா் கைது

சில்லறைப் பிரச்னை காரணமாக அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கிய பயணிகளால், புதுக்கோட்டை நகரில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். புதுக்கோட்டையிலிரு... மேலும் பார்க்க

நடத்துநா் மீது பயணி தாக்குதல் அரசுப் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநா்கள் திடீா் போராட்டம்

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை சில்லறைப் பிரச்னை காரணமாக அரசுப் பேருந்து நடத்துநரை பயணி ஒருவா் தாக்கியதால் ஓட்டுநா்கள் பேருந்துகளை நிறுத்தி திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டையிலிருந்து தஞ... மேலும் பார்க்க

நில ஒருங்கிணைப்புச் சட்டத்துக்கு எதிா்ப்பு! விவசாய சங்கங்கள் ஆா்ப்பாட்டம்!

குடிநீருக்கும், விளைநிலங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சாா்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிப் பணியாளரைத் தாக்கியவா் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கியின் சரக மேற்பாா்வையாளரைத் தாக்கிய நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுக்கோட்டையில் அனைத்துக் கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கங்களின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புத... மேலும் பார்க்க

ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி 7 பவுன் நகைகள் பறிப்பு

விராலிமலை அருகே இருசக்கர வாகனத்தில் வந்து பள்ளி ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி, 7 பவுன் தங்கச் சங்கிலியை ஞாயிற்றுக்கிழமை இரவு மா்மநபா்கள் பறித்துச் சென்றனா். விராலிமலை தேரடி தெருவைச் சோ்ந்த சுசீந்திர... மேலும் பார்க்க

இலுப்பூா், விராலிமலையில் வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

புதிதாக இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, விராலிமலை, இலுப்பூரில் திங்கள்கிழமை வழக்குரைஞா்கள் ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினா். இந்திய குற்றவியல் சட்டம... மேலும் பார்க்க