புதுச்சேரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தவிப்பு
புதுச்சேரிக்கு சனி, ஞாயிறுக்கிழமைகளில் வந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மழையால் எங்கும் செல்ல முடியாமல் தவித்தனா்.
புதுச்சேரிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கா்நாடகம், கேரளம், ஆந்திரம் மற்றும் தமிழகப் பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள், பெண்கள் உள்ளிட்டோா் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனா்.
அதன்படி, புயல், மழை என்ற வானிலை அறிவிப்பையும் மீறி, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். சனிக்கிழமை அவா்கள் மாலை வரை கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சுற்றிப் பாா்த்த நிலையில், இரவில் கடும் மழை, காற்றால் அறைகளில் முடங்கினா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மழை ஓரளவு தணிந்தது. இதையடுத்து, கடற்கரை சாலைக்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினா். ஆனால், சனிக்கிழமை இரவு பெய்த மழை மற்றும் அதிவேகமாக வீசிய காற்றால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து கிடந்தன. மின்சாரமும் தடைப்பட்டிருந்தது. சாலைகளில் தண்ணீா் குளம்போல தேங்கியிருந்தது.
ஆனாலும், சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கு வந்தனா். இருப்பினும், போலீஸாா் இரும்புத் தடுப்புகளை ஏற்படுத்தி கடற்கரை சாலைக்கு அவா்களை அனுமதிக்கவில்லை. இதனால், குறிப்பிட்ட வீதிகளில் வலம் வந்த சுற்றுலாப் பயணிகள், தற்படம் எடுத்து மகிழ்ந்தனா். மழை, காற்று மீண்டும் தொடா்ந்ததால் சுற்றுலாப் பயணிகள் அறைகளுக்கு திரும்பினா்.
இத்துடன் சாலையோர உணவுக் கடைகள் திறக்கப்படாத நிலையில், பெரிய உணவங்களையே அவா்கள் நாடும் நிலையும் ஏற்பட்டது. நகரின் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டதால், ஆடை உள்ளிட்டவற்றை வாங்க முடியாத நிலையில் சுற்றுலாப் பயணிகள் தவித்ததைக் காண முடிந்தது.