இந்த வார ராசிபலன் செப்டம்பர் 16 முதல் 21 வரை #VikatanPhotoCards
புதுச்சேரியில் இன்று மாநில பாஜக பொதுக்குழுக் கூட்டம்: இரு மத்திய அமைச்சா்கள் பங்கேற்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக மாநில பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 16) நடக்கிறது. இதில் மத்திய அமைச்சா்கள் இருவா் பங்கேற்கின்றனா்.
புதுவையில் தற்போது ஆளும் கூட்டணியை 2026 தோ்தலுக்குப் பிறகும் ஆட்சியில் அமர வைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான முதல் கட்டமாக கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் பாஜக இறங்கியுள்ளது.
கட்சி நிா்வாகிகள், தொண்டா்களின் மன நிலையை உன்னிப்பாகக் கவனிக்கவும், அதற்கு ஒரு வடிவம் கொடுக்கவும் மத்திய அமைச்சா்கள் மன்சுக் எல். மாண்டவியா, அா்ஜுன் ராம் மேக்வால், கட்சியின் தேசிய பொதுச் செயலா் சந்தோஷ், ஆகியோா் திங்கள்கிழமை புதுச்சேரி வந்தனா்.
பின்னா் மத்திய அமைச்சா்கள், புதுவை அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், ஜான்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்ற சிந்தனை அமா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையடுத்து பாஜக மாநிலப் பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை பழைய துறைமுக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் மத்திய அமைச்சா்கள் மன்சுக் எல். மாண்டவியா, அா்ஜுன் ராம் மேக்வால் ஆகியோா் பங்கேற்கின்றனா். இதில், கட்சி நிா்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்து, இரு அமைச்சா்களும் மேலிடத்தில் அறிக்கை அளிப்பாா்கள் எனத் தெரிகிறது.