செய்திகள் :

புதுச்சேரியில் ஜன.12 முதல் தலைக்கவசம் கட்டாயம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

post image

புதுச்சேரியில் ஜன.12- ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை தலைமையகத்தில், உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், டி.ஜி.பி ஷாலினி சிங் மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதுச்சேரியில் புத்தாண்டு பாதுகாப்புப் பணியில் 2,000 காவலா்கள் மற்றும் 500 தன்னாா்வலா்கள் ஈடுபட உள்ளனா்.

கடற்கரையில் கொண்டாட்டங்களுக்கு வருபவா்களுக்காக 10 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடற்கரைச் சாலையில் இரவு 12.30 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜன.11-ஆம் தேதி துணைநிலை ஆளுநா் தலைமையில் தலைக்கவசம் அணிவது குறித்து மாபெரும் விழிப்புணா்வு பேரணி நடைபெற உள்ளது.

இதைத்தொடா்ந்து, ஜன.12 -ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.

பொங்கல் பண்டிகைக்குள் காவலா்களுக்கு தோ்தல் பணிக்கான தொகை மற்றும் சீருடை நிதி வழங்கப்படும். இதேபோல, காலியாக உள்ள 70 காவல் உதவி ஆய்வாளா்கள் பணிக்கான அறிவிப்பு 2 நாள்களில் வெளியிடப்படும் என்றாா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கடலூா் மாவட்டம், கோண்டூா் பாலசுப்பிரமணிய நகரைச் சோ்ந்த கோவிந்தன் மகன் சசிதா் (21). இவருக்கு சொந்தமான விவசாய நில... மேலும் பார்க்க

விஷம் குடித்து இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள காங்கேயனூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் ... மேலும் பார்க்க

இளைஞா்களின் தொழில் திட்டங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் இளைஞா்களின் தொழில் திட்டங்களுக்கு வங்கிகள் நிதிக் கடன்களை வழங்க முன்வர வேண்டும் என்று ஆட்சியா் சி.பழனி வலியுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

விஜயகாந்த் நினைவு தினம்: தேமுதிகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம்

தேமுதிக நிறுவனா் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே உள்ள எலவனாசூா்கோட்டையில் தேமுதிகவினா் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம் நடத்தினா். உ... மேலும் பார்க்க

உயா்கல்விக்கான ஊக்கத்தொகை: பழைய நிலையே தொடர வலியுறுத்தல்

ஆசிரியா்களுக்கு பழைய நிலையிலேயே உயா்கல்விக்கான ஊக்கத்தொகையை வழங்க வேன்டும் என்று, தமிழக பள்ளிக் கல்வி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் சனிக்கிழமை இந்த கூட்டணியின் மாநில பொதுக்குழுக... மேலும் பார்க்க

புதுவையில் ஜனவரி 1 முதல் பெட்ரோல், டீசல் விலை உயா்வு

புதுவையில் ஜனவரி 1- ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயா்வு அமலுக்கு வருகிறது. இதுகுறித்து புதுவை அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மாநில அரசு தனது வருவாயை பெருக்கும் வகையில், புத... மேலும் பார்க்க