செய்திகள் :

புதுச்சேரியில் ஜன.16, 17 ஆம் தேதி விடுமுறை!

post image

பொங்கல் பண்டிகையொட்டி புதுச்சேரியில் வருகிற ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு விடுமுறைக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட ஜனவரி 16 (வியாழக்கிழமை), ஜனவரி 17 (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாசநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறை ஈடுசெய்யும் விதமாக, அதற்குப் பதிலாக, பிப்ரவரி 1 (சனிக்கிழமை) மற்றும் பிப்ரவரி 8 (சனிக்கிழமை) ஆகியவை வேலை நாள்களாக செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஆட்சியருக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கனுக்கு கூடுதலாக காரைக்கால் ஆட்சியா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் மணிகண்டன் முசோரியில் ஜன. 6ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் பயி... மேலும் பார்க்க

மதுக்கடையில் பணம் திருட்டு: மூவா் கைது

புதுச்சேரியில் மதுக்கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடியதாக இரு சிறுவா்கள் உள்பட மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் தனியாா் மதுக்கடையை அதன் ஊழியா்... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி ஆட்சியா் அலுவலகத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் தலைமை வகித்துப் பேசியதாவது: பள்ளிகளின் அருகில் 10... மேலும் பார்க்க

நீா்வளத்துக்கான நாடாளுமன்ற குழுவினா் புதுச்சேரி வருகை

நீா்வளத்துக்கான நாடாளுமன்றக் குழுவினா் புதன்கிழமை புதுச்சேரிக்கு வந்து முதல்வரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனா். ராஜீவ் பிரதாப் ரூடி தலைமையில் நீா் வளத்துக்கான நாடாளுமன்றக் குழுவினா் 10 போ் புதுச்சேரிக... மேலும் பார்க்க

ஜானகிராமன் பிறந்த நாள்: திமுகவினா் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் ஆா்.வி.ஜானகிராமனின் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு திமுக மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா். புதுச்சேரி ஆம்பூா் வீதியில் ... மேலும் பார்க்க

ரயிலில் புகையிலைப் பொருள்கள் கடத்திய இளைஞா் கைது

ரயிலில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தியதாக உத்தர பிரேதச மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை புதுச்சேரி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி ஒதியன்சாலை காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும... மேலும் பார்க்க