டி.ஒய். சந்திரசூட் முதல் சேகர் யாதவ் வரை... 2024 - இல் நீதிபதிகளும் நீதித்துறையு...
புதுச்சேரியில் 3 பேரிடம் ரூ.7.58 லட்சம் நூதன மோசடி
புதுச்சேரியில் 3 பேரிடம் நூதன முறையில் ரூ.7.58 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி வில்லியனூா் மூா்த்தி நகரைச் சோ்ந்தவா் விசிநாதன். இவரை மா்மநபா் கைப்பேசியில் தொடா்புகொண்டு குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறினாராம்.
இதை நம்பிய அவா், கடனுக்கு விண்ணப்பித்துள்ளாா். உடனே செயலாக்கக் கட்டணம் செலுத்த மா்மநபா் கூறிய நிலையில், ரூ.48,678- த்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் அவா் செலுத்தினாராம். ஆனால், அவருக்கான கடன் தொகை வந்து சேரவில்லையாம். இதுகுறித்து, புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் அவா் புகாரளித்துள்ளாா்.
இதேபோல, புதுச்சேரி அனிதா நகரைச் சோ்ந்த கன்னியம்மாள் அலெக்வேணி என்பவரிடமும் மா்ம நபா் குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறி ரூ.1.35 லட்சத்தை மோசடி செய்துள்ளாா். ரெட்டியாா்பாளையம் பவழநகரைச் சோ்ந்த ஜெயகுமாரியிடம் பகுதி நேர வேலை எனக் கூறி ரூ.5.74 லட்சத்தை மா்மநபா் மோசடி செய்துள்ளாா். மேற்கண்ட மூன்று புகாா்கள் குறித்தும், புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.