விக்கெட் கீப்பருக்கு கடும் போட்டி: கே.எல்.ராகுலுக்கு ஓய்வளிக்க முடிவா?
புதுச்சேரி ஆட்சியருக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கனுக்கு கூடுதலாக காரைக்கால் ஆட்சியா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் மணிகண்டன் முசோரியில் ஜன. 6ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க சென்றுள்ளாா்.
இந்த நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் மற்றும் காரைக்கால் பவா் காா்ப்பரேஷன் நிா்வாக இயக்குநா் ஆகிய பொறுப்புகளை, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் ஏற்கெனவே வகிக்கும் பொறுப்புகளுடன் கூடுதலாக கவனிப்பாா்.
இதற்கான உத்தரவை புதுவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறை சாா்புச் செயலா் கண்ணன் பிறப்பித்துள்ளாா்.