செய்திகள் :

புதுச்சேரி கலிங்க மலை ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு!

post image

புதுச்சேரி அருகே கலிங்க மலை ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில், புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவில்களில் நடைபெற்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா’ ‘கோபாலா’ என்ற கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் ஸ்ரீரங்கநாதரை வழிபட்டனர்.

திருமாலுக்குரிய திவ்ய தேசங்கள் 108. அவற்றில் நாம் பூமியில் காண முடியாதது இரண்டு. ஒன்று வைகுண்டம் மற்றது பரமபதம். விஷ்ணுவை எப்போதும் பாடிப் பரவுகின்ற பக்தர்கள், பகவானின் தொண்டர்களாக வசிப்பது இந்தப் பரமபதத்தில்தான். அந்தப் பரமபதத்தில் பகவானுடன் உறையும் பெருமையைப் பெறுவதான வாயில்தான் பரமபத வாசல்,மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி புதுச்சேரி அருகே கலிங்கமலையில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 1-ஆம் தேதி பகல் பத்து திருவிழாவாக தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல்பத்து திருவிழாவின் 10-ஆம் நாள் பரமபதநாதன் சேவையில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் எழுந்தருளினர். தொடர்ந்து திருமங்கையாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையும் படிக்க |ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு!

தொடர்ந்து வைகுண்ட ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு துலாம் லக்னத்தில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. பாமா, ருக்மணி சமேதராக ஸ்ரீ ரங்கநாத பெருமாள் சுவாமி பரம நாதனாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் சொர்க்க வாசலை திறந்தபோது அதிகாலை முதலே வருகை புரிந்து இருந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் மக்கள் சொர்க்கவாசலுக்குள் நுழைந்து கோபாலா, கோவிந்தா என பக்தி கோஷம் முழங்க ஸ்ரீரங்கநாத பெருமாள் பக்தி பரவசத்துடன் வழிபட்டு சென்றனர். இதில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவில், முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவில், எம்.எஸ். அக்ரகாரம் வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவில், கொம்பாக்கம் வேங்கடாசலபதி பெருமாள் கோவில், வடுக்குப்பம் வெங்கடேச பெருமாள் கோவில் உள்பட புதுச்சேரியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

போதைப் பொருள் கடத்திய வங்கதேசத்து நபர் உள்பட 2 பேர் கைது!

புது தில்லியில் போதைப் பொருள் கடத்தியதாக, சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய வங்கதேசத்து நபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.புது தில்லியின் போதைப் பொருள் தடுப்பு காவல் படையினருக்கு கிடைத்த ரகசிய தக... மேலும் பார்க்க

இலங்கை: இஸ்லாத்தை அவமதித்த புத்த துறவிக்கு சிறை!

இலங்கையில் இஸ்லாத்தை அவமானமாக பேசியதற்காகவும் மதவெறுப்பை தூண்டியதற்காகவும் புத்த துறவிக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இலங்கையின் மூத்த புத்த துறவியும் சிங்கலீஸ் புத்திஸ்த் நேஷனல் கட்சி தலைவருமான ... மேலும் பார்க்க

வீர தீர சூரன்-2 முதல் பாடல் நாளை வெளியாகிறது!

‘வீர தீர சூரன்-2’ முதல் பாடல் நாளை(ஜன.11) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரம... மேலும் பார்க்க

வயதான தம்பதியை பிணையக் கைதிகளாக பிடித்து கொள்ளை! 3 பேர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் வயதான தம்பதியை பிணையக் கைதிகளாக பிடித்து கொள்ளையடித்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.காஜியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ராம்தாஸ் குப்தா (வயது 78) மற்றும் அவரது மனைவ... மேலும் பார்க்க

ஒன்ஸ் மோர் பட புதிய பாடல்!

ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் புதிய பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள ஒன்ஸ் மோர் திரைப்படம் இன்றைய கால இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. நாயக... மேலும் பார்க்க

தாயும் குழந்தையும் தீயில் கருகி பலி! தந்தை தற்கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் வீட்டில் பற்றிய தீயில் தாயும் குழந்தையும் பலியாகினர். தந்தையின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.அம்மாவட்டத்தின் கம்தாரா கிராமத்தைச் சேர்ந்தவர... மேலும் பார்க்க