செய்திகள் :

புதுச்சேரி: ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமா? - அமைச்சர் பதிலால் நீடிக்கும் குழப்பம்

post image

புதுச்சேரியில் சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகள் வருகையினாலும், இருசக்கர வாகனங்களின் பெருக்கத்தினாலும் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால் 2025 ஜனவரி 1-ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார் போக்குவரத்து சீனியர் எஸ்.பி பிரவீன்குமார் திரிபாதி.

ஹெல்மெட் அபராதம் | கோப்புப் படம்

அத்துடன், ``புதுச்சேரியில் ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மீறுபவர்களுக்கு ரூ.1,000/- அபராதம் விதிக்கப்படும். அவர்களின் லைசென்ஸ் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் இது பொருந்தும். இதில் எந்தவித அரசியல் தலையீடும் இருக்காது” என்றும் கூறியிருந்தார்.

தொடர்ந்து கடந்த 17-ம் தேதி அவர் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில், `புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளாக இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்திருக்கிறது. அவர்கள் கடைபிடிக்கும் பாதுகாப்பற்ற நடைமுறைகளால் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

புதுச்சேரி அரசு

மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி, நாட்டின் அதிக விபத்துகள் நடக்கும் மாநிலமாக இருக்கிறது. அதை கருத்தில் கொண்டு புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையின் இலக்கான உயிரிழப்பு இல்லாத் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்திருக்கிறது. அதனால் ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படவிருக்கிறது.

அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிந்து தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் ரூ.1,000/- அபராதம் மற்றும், லைசென்ஸ் ரத்து போன்ற நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

புதுச்சேரி போலீஸ்

இந்த நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், ``இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை நாம் பின்பற்ற வேண்டும். புதுச்சேரியில் விபத்துகளை 20% சதவிகிதம் தடுத்திருக்கிறோம்.  ஆனாலும் விபத்து காரணமாக யாரும் உயிரிழக்கக் கூடாது. அதனால் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

யாருக்காக ஹெல்மெட் அணியச் சொல்கின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் நன்மைக்காகவே ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை மூலம் கூறுகிறோம். தலைகவசம் அணிய வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிப்பது போன்ற தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறையினரிடம் கூறியிருக்கிறேன். 

புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்

ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதுகுறித்து டிஜிபியிடம் ஆலோசித்து இறுதி முடிவை கூறுவேன்” என்றார். ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000/- அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்துப் போலீஸார் கூறிவரும் நிலையில், அமைச்சரின் இந்த பதில் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

``பெருங்குடி குப்பை எரி உலை திட்டம் கைவிடாவிட்டால் போராட்டம் நடத்துவோம்"- அன்புமணி எச்சரிக்கை

பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தை கைவிடாவிட்டால் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "சென்... மேலும் பார்க்க

USA : டெக் ஜாம்பவான்கள் vs அமெரிக்க தேசியவாதிகள் : திடீர் பிளவுக்கு என்ன காரணம்?

‘முழுக்க முழுக்க மோசடி'ஹெச்1பி அமெரிக்க விசா மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் தொடர்பாக அண்மையில் வெடித்த விவாதம், டொனால்டு ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளர்களுக்குள்ளேயே குடியேற்றக் கொள்கை விவகாரத்தில் பிளவை ஏ... மேலும் பார்க்க

'திராவிட மாடல் அரசு காரணம் என்றால் காரி துப்புவேன்' - அஜித் விவகாரத்தில் அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜக மிகவும் அரிதாகத்தான் தேர்தல் புறக்கணிப்பு செய்யும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்படி ந... மேலும் பார்க்க

ஒரு வழக்கு; பல மனுக்கள் - இரட்டை இலைக்கு தொடரும் சிக்கல்? | DMK | ADMK | MODI | Imperfect show

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - "இதுவரை, ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி!" - ஸ்டாலின்* - பொள்ளாச்சி சம்பவம் குறித்து யார் உண்மையைச் சொன்னார்கள்? - சட்டமன்றத்தில் மோதல்!* - பாலியல் குற்றவாளிகளுக்கு மரண ... மேலும் பார்க்க