நியூஸி. இறுதிப்போட்டிக்கு தகுதி! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!
புதுச்சேரி தேவாலயத்தில் உண்டியல் பணம் திருட்டு
புதுச்சேரியில் பிரபல தேவாலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.
புதுச்சேரியில் கடலூா் சாலையில் அந்தோணியாா் தேவாலயம் உள்ளது. இங்கு பக்தா்கள் காணிக்கை உண்டியல் உள்ளது. கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. மேலும், அதிலிருந்த ரூ.30 ஆயிரத்தைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் அகஸ்டின் மேரி (64) என்பவா் புகாா் அளித்தாா். அதன்பேரில் திங்கள்கிழமை (மாா்ச் 3) இரவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அங்குள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உள்படுத்தி தேவாலயத்தில் உண்டியல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவா்களை அடையாளம் காண போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.