செய்திகள் :

புதுச்சேரி IRBn: `32 கி.மீ ரூட் மார்ச்’ - ஐஆர்பிஎன் அதிகாரிகளுக்கு கொடுத்தது தண்டனையா... பயிற்சியா?

post image

புதுச்சேரியில் இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் (IRBn) படைப்பிரிவு கடந்த 2005-ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் தலைமையகம் கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 24-ம் தேதி டி.ஜி.பி ஷாலினி சிங், ஐ.ஆர்.பி.என் உதவி கமாண்டருக்கு ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், `அனைத்து உதவி கமாண்டண்ட் மற்றும் துணை கமாண்டண்ட்களின் மேற்பார்வையின் கீழ் இன்ஸ்பெக்டர்கள், அவருக்கு கீழ் பணியாற்றும் எஸ்.ஐ-க்கள், ஏ.எஸ்.ஐ-க்கள், ஏட்டுகள் மற்றும் அவரை சார்ந்த அதிகாரிகள் மார்ச் 5-ம் தேதி காலை 6.30 மணிக்கு கோரிமேட்டில் உள்ள ஐ.ஆர்.பி.என் தலைமை அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும்.

புதுச்சேரி IRBn

அன்றிலிருந்து தினமும் திண்டிவனம் வரை `ரூட் மார்ச்’ செல்ல வேண்டும். அந்த ரூட் மார்ச் செல்பவர்கள் காக்கி பேண்ட், டி-ஷர்ட் மற்றும் ஷூ அணிந்திருக்க வேண்டும். ரூட் மார்ச் முடிந்தவுடன் அனைவரையும் திண்டிவனத்தில் இருந்து அழைத்து வருவதற்கு இரண்டு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை எந்தவித பிரச்னையும் இன்றி இலகுவாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் ஐ.ஆர்.பி.என் பிரிவினர் தரப்பிலிருந்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகிறது. அதில், `புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள் IRBn அதிகாரிகளை கீழ்த்தரமாக நடத்துகிறார்கள்.

எதற்காக என்று தெரியவில்லை, ஆனால் இன்றுவரை இதே நிலைதான். IRBn அதிகாரிகள் எங்கள் பணியை நேர்மையாக செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் எங்களுக்கு எந்த மரியாதையும் கிடைக்கவில்லை. ஹோம் கார்டிற்கும் கீழான நிலையில் நடத்தப்படுகிறோம். உள்ளூர் போலீஸுடன் ஒப்பிடும்போது எங்களுக்கான நலன்கள் எதுவும் இல்லை. இந்த நிலையில் IRBn அதிகாரிகள் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வரை 40 கி.மீ பாதயாத்திரை செல்லும்படி DGP மேடம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது எங்களுக்கு மிகுந்த வேதனையைக் கொடுக்கிறது. ஏனெனில் பெரும்பாலான அதிகாரிகள் 40 வயதிற்கு மேல் இருக்கிறோம். பலருக்கு பி.பி, சர்க்கரை நோய், மூட்டுவலி போன்ற உடல்நலக் கோளாறுகள் உள்ளன. எந்த பயிற்சியும் இன்றி எப்படிப் பயணிக்க முடியும்?

புதுச்சேரி IRBn

மேலும், இந்த ரூட் மார்ச்சில் எந்த உணவும் வழங்கப்படாது. IRBn அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணியாற்றுகிறோம். ஆனால் லஞ்சம் வாங்கும் புதுச்சேரி போலீஸார் பலர் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். பல IRBn அதிகாரிகளை உள்ளூர் போலீஸுடன் இணைத்துள்ளனர். அதுபோல் புதுச்சேரியிலும் IRBn அதிகாரிகளை PAP (Puducherry Armed Police) உடன் இணைக்க வேண்டும். இந்த கோரிக்கையை IGP, DGP, முதல்வர் (CM), மற்றும் லெப்டினன்ட் கவர்னர் (LG) அவர்களுக்கு முறையாக சமர்ப்பிக்க இருக்கிறோம். நாங்கள் எங்கள் கடமையை நேர்மையாக செய்து கொண்டிருக்கிறோம்.

எனவே எங்களுக்கான உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது குறித்து விளக்கம் கேட்க டி.ஜி.பி ஷாலினி சிங்கை அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. அதையடுத்து காவல்துறை மற்றும் ராணுவ உயரதிகாரிகள் சிலரிடம் `ரூட் மார்ச்’ முறை குறித்து விசாரித்தோம். அப்போது பேசிய அவர்கள், ``துப்பாக்கிகளை இரு கைகளாலும் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்துக் கொண்டு சென்றால்தான், அது தண்டனை. ஆனால் இது பயிற்சி. இது ஐ.ஆர்.பி.என்னில் ரூட் மார்ச், லாங் மார்ச் என்பது வழக்கமான நடைமுறைதான்.

புதுச்சேரி டி.ஜி.பி ஷாலினி சிங்

கேமஃபளாக் (Camouflage) சீருடை அணிந்து அவர்கள் பரேடு செல்லும்போது, ராணுவ வீரர்கள் செல்வதைப் போன்றுதான் இருக்கும். பொதுமக்கள் அவர்களை பார்ப்பார்கள், சல்யூட் வைப்பார்கள். குழந்தைகள் கை கொடுப்பார்கள். மேலும் இவர்கள் இந்தியன் ரிசர்வ் பட்டாலியன். புதுச்சேரி பட்டாலியன்கள் இல்லை. அதனால் புதுச்சேரி போலீஸாருடன் ஒருபோதும் இவர்களை இணைக்க முடியாது. மனநலன், உடல் நலன், உடலை அவர்கள் பேணும் விதம், ஆயுங்களை கையாளும் முறை, பரேடு செல்லும் முறை என அனைத்தும் பயிற்சிதான். போலீஸாருக்கும் இப்படி வாரா வாரம் பரேடு நடக்கிறது. நாங்கள் 50 கிலோமீட்டர் வரை ரூட் மார்ச் செய்வோம். பயிற்சியை தண்டனை என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ? மேலும் பயிற்சி இல்லாமல் இந்தியன் ரிசர்வ் பட்டாலியனில் எப்படி தொடர முடியும் ?” என்றனர்.

TVK: 'மரியாதைக்குரிய H.ராஜா என்று குறிப்பிட சொல்கிறார்கள்' - விமர்சனங்களுக்கு தவெக ராஜ்மோகன் பதில்

தவெக-வின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நடந்து முடிந்திருக்கிறது. நிகழ்வில் விஜய் பேசிய நிறைய விஷயங்களும் விவாதமாகி இருக்கிறது. மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மாநில அரசையும் மத்திய அரசையும் ஒரே தராசில் வை... மேலும் பார்க்க

சம்மன் கிழிப்பு; தள்ளுமுள்ளு - கைதாகும் சீமான்? | VIJAY TVK | SEEMAN NTK | STALIN Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* தமிழ்ப் பண்பாட்டில் சிவனுக்கு இடம் - அமித்ஷா* தமிழக அரசு குறித்து அமித் ஷா சர்ச்சை பேச்சு: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்? * “அரசாங்கத்தின் அறிவுரையைக் கேட்டதற்காக எ... மேலும் பார்க்க

Trump: 'யாராவது இதில் கையெழுத்திடுவார்களா?!' - தன்னை தானே சாடிய ட்ரம்ப்!

அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார் ட்ரம்ப்.கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட... மேலும் பார்க்க

`தொகுதி மறுசீரமைப்பை நாங்கள் வேண்டாம் எனக் கூறுவது இதனால்தான்..!' - அமைச்சர் ரகுபதி சொல்வதென்ன?

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “கடந்த 1951, 1961, 1971 ஆகிய மூன்று ஆண்டுகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. 1951... மேலும் பார்க்க

``நாளையும் என்னால் ஆஜராக முடியாது... உங்களால் என்ன செய்ய முடியும்?" - சீமான் ஆவேசம்

நடிகை விஜயலட்சுமியின் புகாரின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை 12 வார காலங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிரு... மேலும் பார்க்க

Delimitation : 'அமித் ஷா விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது' - பாஜகவுக்கு எதிராக ராமதாஸ்

`குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான...’நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், "இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் 2026-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செ... மேலும் பார்க்க