சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.க்கு எதிரான போட்டியில் ஆப்கன் பேட்டிங்!
``நாளையும் என்னால் ஆஜராக முடியாது... உங்களால் என்ன செய்ய முடியும்?" - சீமான் ஆவேசம்
நடிகை விஜயலட்சுமியின் புகாரின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை 12 வார காலங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக சீமான் இன்று ஆஜராக வேண்டிய நிலையில், அவரின் வழக்கறிஞர்கள் காவல்நிலையத்தில் ஆஜராகி விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கடிதம் கொட்த்தனர். இதற்கிடையில், காவல்துறை, சீமான் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது. அதை அகற்றிய சீமானின் வீட்டு உதவியாளர், காவலாளிக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காவலாளி கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சீமான், ``என் தொடர்பான வழக்கில் காட்டப்படும் இந்த அவசரம் பொள்ளாச்சி வழக்கிலோ, அண்ணா பல்கலைக் கழக வழக்கிலோ காண்பிக்கவே இல்லையே. இது எந்தமாதிரியான அரசு என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். எப்போதெல்லாம் தேர்தல் நெருங்குகிறதோ, எப்போதெல்லாம் என்னை சமாளிக்க முடியாமல் இந்த அரசு திணறுகிறதோ அப்போதெல்லாம் அந்தப் பெண்ணை தூண்டிவிட்டு வழக்கு, விசாரணை எனக் கூறுவார்கள். நான் இங்கேதானே இருக்கிறேன்.
வளசரவாக்கம் காவல்நிலையமும் அங்கே தானே இருக்கிறது. இப்போது உடனே வரவேண்டிய அவசரம் என்ன? இப்போது கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். நாளையும் என்னால் ஆஜராக முடியாது... என்னை என்ன செய்ய முடியும்... இதற்கு முன்பே ஒருமுறை இதே புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரிக்கப்பட்டேன். இப்போதும் அதே விசாரணை தானே. இதற்கு ஏன் இவ்வளவு அவசரம். நாளை வேறு ஒரு இடத்தில் கட்சிப் பணி இருக்கிறது. அதனால் நாளையும் ஆஜராக முடியாது" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
