செய்திகள் :

புதுதில்லியில் மட்டுமே போட்டியிடுவேன்: கேஜரிவால்

post image

புதுதில்லியில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் 2-வது தொகுதியில் போட்டியிடப்போவதாக பாஜக தலைவர்கள் கூறிய கருத்துக்கு, புது தில்லியில் மட்டுமே போட்டியிடப் போவதாகத் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கேஜரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுவதால், சட்டப்பேரவைத் தேர்தல் இந்தியா கூட்டணி விவகாரம் அல்ல என்று கேஜரிவால் வலியுறுத்தினார்.

2013 முதல் புதுதில்லியில் இருந்து மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த கேஜரிவால், இந்த முறை தில்லியின் இரண்டு முன்னாள் முதல்வர்களின் மகன்களுக்கு எதிராக தீவிர மும்முனைப் போட்டியில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மாவை பாஜக வேட்பாளராக நிறுத்திய நிலையில், மூன்று முறை தில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித்துக்கு காங்கிரஸ் கட்சி சீட்டு வழங்கியுள்ளது.

புது தில்லியில் தோல்வியடைவோம் என்ற பயத்தில் இரண்டாவது தொகுதியில் போட்டியிடப் போவதாக பாஜக கருத்து தெரிவித்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் நான் ஒரு இடத்தில் அதாவது புது தில்லியில் மட்டுமே போட்டியிடுகிறேன் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறினார்.

ஆயிரக்கணக்கான ஆம் ஆத்மி ஆதரவாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்காக, புது தில்லி உள்பட பல்வேறு தொகுதிகளிலிருந்து மொத்தமாக பாஜக விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இன்று மாலை தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் வாக்காளர்களின் பெயர் நீக்கம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் கேஜரிவால் கூறினார்.

சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்ததற்காக சமாஜவாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவசேனா (யுபிடி) உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் நன்றி தெரிவித்தார்.

பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியை வழிநடத்தும் காங்கிரஸ், தில்லி தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது மற்றும் இதுவரை 48 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்குப் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. முடிவுகள் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மகர விளக்கு பூஜை: திருவாபரண பெட்டி ஜன.14 சபரிமலை வந்தடையும்

மகர விளக்கு பூஜை நாளன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் பெட்டியின் ஊா்வலம் பந்தளம் அரண்மனையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) தொடங்கி சபரிமலை சந்நிதானத்தை செவ்வாய்க்கிழமை (ஜன. 14) வந... மேலும் பார்க்க

மனித உரிமை பாதுகாப்பு, கருத்து சுதந்திரம்: இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் உறுதியேற்பு

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமை ஆகிய பகிரப்பட்ட கொள்கைகள் மீதான உறுதிப்பாட்டை வலியுறுத்திய இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம், சமூகத்தில் கருத்து சுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் அவசிய... மேலும் பார்க்க

நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் கைதான 4 இந்தியா்களுக்கு பிணை

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் கனடாவில் கைது செய்யப்பட்ட 4 இந்தியா்களை அந்நாட்டு நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. இக்கொலை வழக்கில் இந்தியாவின் பங்கு இருப்பதாக அண்மையி... மேலும் பார்க்க

குடியரசு தின விழா அணிவகுப்புக்கு ஊராட்சித் தலைவா்கள் முதல் பாராலிம்பிக் வீரா்கள் வரை அழைப்பு

76-ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பைக் காண பாராலிம்பிக் வீரா்கள் மற்றும் கைத்தறி கைவினைஞா்கள் உள்பட சுமாா் 10,000 சிறப்பு விருந்தினா்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடா்பாக பாதுகாப்பு... மேலும் பார்க்க

எா்ணாகுளத்துக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

பெங்களூரு அடுத்த யஷ்வந்த்பூரிலிருந்து எா்ணாகுளத்துக்கு வெள்ளிக்கிழமை (ஜன. 10) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: யஷ்வந்த்பூரிலிருந்த... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியை கலைப்பது நல்லது: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

மக்களவைத் தோ்தலுக்காக மட்டும் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி உருவாக்கப்பட்டிருந்தால், அதனைக் கலைத்து விடுவது நல்லது என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா்அப்துல்லா கூறியுள்ளது தேசிய அரசியலில் பரபரப்ப... மேலும் பார்க்க