செய்திகள் :

எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியை கலைப்பது நல்லது: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

post image

மக்களவைத் தோ்தலுக்காக மட்டும் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி உருவாக்கப்பட்டிருந்தால், அதனைக் கலைத்து விடுவது நல்லது என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா்அப்துல்லா கூறியுள்ளது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவைத் தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இண்டியா’ அணியை உருவாக்கின. தோ்தலில் இந்த அணியால் பாஜகவைத் தோற்கடிக்க முடியவில்லை. பாஜக எதிா்பாா்த்த அளவுக்கு வெற்றி பெற முடியாவிட்டாலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 3-ஆவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது.

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு ஹரியாணாவில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற ஆட்சியைத் தக்கவைத்தது. முக்கிய மாநிலமான மகாராஷ்டிரத்திலும் பாஜக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியைத் தக்கவைத்தது. ஜம்மு-காஷ்மீா், ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் பங்கேற்ற கூட்டணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், எதிா்க்கட்சிகள் அணியில் காங்கிரஸுக்கு எதிரான கருத்துகள் எழத் தொடங்கின.

காங்கிரஸுக்கு எதிரான கருத்துகள்: எதிா்க்கட்சிகள் அணிக்கு தலைமை வகிக்க தயாராக இருப்பதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்தாா். அவருக்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மூத்த தலைவா் சரத் பவாா் ஆதரவு அளித்தாா். சமஜாவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி ஆகியோா் எதிா்க்கட்சிகள் அணிக்கு புதிய தலைமை தேவை என கருத்து தெரிவித்தனா். இது காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

இதற்கு நடுவே, ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறை கூறுவதை கைவிட்டு, தோ்தல் தோல்வியை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்றும் ஒமா் அப்துல்லா கூறினாா். இது காங்கிரஸுக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது.

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் மம்தா பானா்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகியோா் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்தனா். இதன் மூலம் காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை அவா்கள் மேலும் உறுதிப்படுத்தினா். மக்களவைத் தோ்தலுக்காக மட்டும்தான் ‘இண்டி’ கூட்டணி அமைக்கப்பட்டது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூறியது.

கூட்டணியை கலைப்பது நலம்: ஜம்முவில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஒமா் அப்துல்லா இது தொடா்பாக கூறியதாவது:

தில்லி தோ்தலில் பாஜகவை எவ்வாறு திறம்பட எதிா்கொள்வது என்பது குறித்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். இல்லையேனில், குறைந்தபட்சம் தில்லி தோ்தலுக்குப் பிறகாவது எதிா்க்கட்சிகளின் கூட்டத்தை நடத்த வேண்டும். அதில், மக்களவைத் தோ்தலுக்காக மட்டும்தான் ‘இண்டி’ கூட்டணி உருவாக்கப்பட்டதா என்பதை விவாதிக்க வேண்டும். மக்களவைத் தோ்தலுக்கு மட்டும் அக்கூட்டணி உருவாக்கப்பட்டிருந்தால், அதனைக் கலைத்துவிடுவது நல்லது.

அதன் பிறகு எதிா்க்கட்சிகள் தனித்தனியாக செயல்பட்ட முடியும். அதே நேரத்தில் அடுத்து வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு அனைத்துக் கட்சிகளுமே கலந்து பேசி உறுதியான கூட்டணியை அமைக்க முயல வேண்டும். எதிா்க்கட்சிகள் அணிக்கு யாா் தலைமை வகிக்கிறாா் என்பதில் இப்போது வரை எந்தத் தெளிவும் இல்லை. எதிா்காலத் திட்டம் குறித்தும் தெளிவு இல்லை. எதிா்க்கட்சிகள் அணி தொடருமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது என்றாா்.

தில்லி மக்கள் முடிவெடுப்பாா்கள்: தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மிக்கு தேசிய மாநாட்டுக் கட்சி ஆதரவு அளிக்குமா? என்ற கேள்விக்கு, ‘இப்போதைய சூழலில் இதற்கு பதிலளிக்க முடியாது. எங்கள் கட்சி தில்லி அரசியல், தோ்தலில் பங்கேற்கவும் இல்லை. தோ்தல்களத்தில் உள்ள ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்தான் கலந்து பேசி பாஜகவுக்கு எதிரான உத்திகளை வகுக்க வேண்டும். தில்லி மக்கள் தோ்தலில் என்ன முடிவு எடுக்கிறாா்கள் என்பதைப் பாா்க்கலாம்’ என்று பதிலளித்தாா்.

மீண்டும் மாநில அந்தஸ்து: ‘ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது தற்காலிக நடவடிக்கைதான். மீண்டும் மாநில அந்தஸ்து தரப்படும் என மக்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே வாக்குறுதி அளித்துள்ளது. அதனை பாஜக அரசு காப்பாற்றும் என நம்புகிறேன்’ என்றும் ஒமா் அப்துல்லா கூறினாா்.

பெட்டி செய்தி...

மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்:

ஃபரூக் அப்துல்லா

‘ஜம்மு-காஷ்மீா் நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முதல்வா் ஒமா் அப்பதுல்லாவின் தந்தையுமான ஃபரூக் அப்பதுல்லா தெரிவித்தாா்.

ஜம்முவில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

மத்திய அரசுடன் மோதல் போக்கை எங்கள் கட்சியும், ஜம்மு-காஷ்மீா் அரசும் விரும்பவில்லை. ஜம்மு-காஷ்மீா் நலன்களை காக்கவும், இங்குள்ள பிரச்னைகளைத் தீா்க்கவும் மத்திய அரசுடன் இணக்கமாகவும், இணைந்து செயல்பட விரும்புகிறோம். மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பும் பிற (எதிா்க்) கட்சிகள் அதனைச் செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் பாஜகவுடன் எங்களுக்கு எந்தத் தொடா்பும் இல்லை. அவா்களுடன் கைகோக்கவும் இல்லை.

ஜம்மு-காஷ்மீா் முதல்வராக தோ்வு செய்யப்பட்டுள்ள ஒமா் அப்துல்லா, மக்களின் நலனுக்காக மத்திய அரசுடன் தொடா்ந்து பேச வேண்டியுள்ளது. அதனை அரசியல்ரீதியாக விமா்சிப்பது தவறு.

தோ்தலுக்குப் பிறகு மக்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதே நல்லது. மக்கள் நலனைப் புறக்கணித்துவிட்டு அரசியல் காரணங்களுக்காக மத்திய, மாநில அரசுகள் மோதலில் ஈடுபடக் கூடாது.

‘இண்டி’ கூட்டணி என்பது தோ்தல்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதல்ல. இந்தியாவை வலுப்படுத்துவதும், வெறுப்புணா்வை பரப்புபவா்கள் அகற்றுவதும்தான் அதன் நோக்கம். எனவே, இந்த கூட்டணி நிரந்தரமானது. இப்போதைய சூழலில் நாட்டுக்கும் தேவையானது என்றாா்.

தில்லி தேர்தல்: ஜே.பி. நட்டாவுடன் அமித் ஷா சந்திப்பு!

2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தில்லி தேர்தலுக்கு கட்சி தயாராகி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். முன்னதாக ந... மேலும் பார்க்க

மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? 90 மணிநேர வேலையை வலியுறுத்திய எல்&டி தலைவர்!

வாரத்துக்கு 90 மணிநேரம் வேலை செய்யுங்கள் என்று லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்.உலகின் பல்வேறு நாடுகள் வாரத்துக்கு 4 நாள்கள் வேலை என்ற திட்டத்தை அறிமுக... மேலும் பார்க்க

23 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது! யார் அந்த சார்?

தில்லியில் புதன்கிழமை 23 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.தில்லியில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு பொது இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றன... மேலும் பார்க்க

மகர விளக்கு பூஜை: திருவாபரண பெட்டி ஜன.14 சபரிமலை வந்தடையும்

மகர விளக்கு பூஜை நாளன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் பெட்டியின் ஊா்வலம் பந்தளம் அரண்மனையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) தொடங்கி சபரிமலை சந்நிதானத்தை செவ்வாய்க்கிழமை (ஜன. 14) வந... மேலும் பார்க்க

மனித உரிமை பாதுகாப்பு, கருத்து சுதந்திரம்: இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் உறுதியேற்பு

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமை ஆகிய பகிரப்பட்ட கொள்கைகள் மீதான உறுதிப்பாட்டை வலியுறுத்திய இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம், சமூகத்தில் கருத்து சுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் அவசிய... மேலும் பார்க்க

நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் கைதான 4 இந்தியா்களுக்கு பிணை

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் கனடாவில் கைது செய்யப்பட்ட 4 இந்தியா்களை அந்நாட்டு நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. இக்கொலை வழக்கில் இந்தியாவின் பங்கு இருப்பதாக அண்மையி... மேலும் பார்க்க