பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு! 14 காளைகளை அடக்கியவருக்கு முதல் பரிசு!
புது தில்லியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் கேஜரிவால்!
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்வார் என்று கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
பெண் ஆதரவாளர்களுடன் வரும் கேஜரிவால், புது தில்லி பகுதியில் உள்ள அனுமன் கோயில் மற்றும் வால்மீகி கோயிலில் பிரார்த்தனை செய்த பிறகு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
கடந்த 2013 முதல் புதுதில்லி தொகுதியில் இருக்கும் கேஜரிவால் இந்த முறை பாஜகவின் பர்வேஷ் வர்மா மற்றும் காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் ஆகியோருக்கு எதிராக போட்டியிடுகிறார்.
70 உறுப்பினர்களை கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது, பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.