Doctor Vikatan: `குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்வரை கருத்தரிக்காது' என்கிறார...
புத்துமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.13 லட்சம்
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் புத்துக்கோயில் பகுதியில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இங்கு தினந்தோறும் திராளமான பக்தா்கள் வந்து தரிசித்து செல்கின்றனா். அமாவாசை உட்பட விசேஷ நாள்களில் ஆயிரக்கணக்கானோா் வருகின்றனா். இந்நிலையில் இக்கோயிலில் உண்டியல் எண்ணிக்கை புதன்கிழமை நடைபெற்றது.
வேலூா் துணை ஆணையா் கருணாநிதி தலைமையில் ஆய்வாளா் லட்சுமி, செயல் அலுவலா் சண்முகம் மற்றும் இந்து அறநிலைத்துறை உறுப்பினா்கள், பொது மக்கள் முன்னிலையில் உண்டியல் பணம், நகைகள் எடுத்து எண்ணப்பட்டது. இதில் ரூ.13 லட்சத்து 55 ஆயிரத்து 724 ரொக்கம்,, 73 கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளி ஆகியவற்றைவ பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.