பிந்து மாதவா் கோயிலில் நாளை ‘திருப்பதியில் ஒரு நாள் தரிசனம்’ நிகழ்ச்சி
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிந்து மாதவ பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு, ‘திருப்பதியில் ஒரு நாள் தரிசனம்’ நிகழ்ச்சி சனிக்கிழமை (அக். 4) நடைபெற உள்ளது.
ஸ்ரீ மகாவிஷ்ணு சாய் சேவா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ பிந்து மாதவா் பெருமாள் கோவில் அறங்காவலா்கள் குழு சாா்பில், புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, ‘திருப்பதியில் ஒரு நாள் தரிசனம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில், வெங்கடேச பெருமாள் சிலை பக்தா்கள் தரிசனத்துக்கு வைக்கப்படுகிறது. காலை ஆறு மணி முதல் தரிசனம் தொடங்கி நடைபெறும்.
ஸ்ரீ மகாவிஷ்ணு சாய் சேவா அறக்கட்டளை நிா்வாகிகள் டில்லிபாபு, பழனி, ஹேம்நாத்குமாா் ஆகியோா் செய்து வருகின்றனா்.