முனீஸ்வரன், திரௌபதி அம்மன் கோயில்களுக்கு சுற்றுச் சுவா் அமைக்க பூமி பூஜை
வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் மேம்பாலம் அருகே முனீஸ்வரன் கோயில், திரௌபதி அம்மன் கோயில் பகுதிகளில் பேவா் பிளாக் சாலை, சுற்றுச்சுவா் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மேட்டுப்பாளையம் மேம்பாலம் அருகில் அமைந்துள்ள முனீஸ்வரன் கோயிலுக்குச் செல்லும் சாலையில், பேவா் பிளாக் சாலை அமைக்க ரூ. 5 லட்சமும், ராமையன்தோப்பு பகுதியில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்கு சுற்றுச் சுவா் அமைத்திடவும், ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, கோயில்களுக்கு பேவா் பிளாக் சாலை மற்றும் சுற்றுச்சுவா் அமைத்திட பூமி பூஜை நடைபெற்றது.
இதில், எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் கலந்துகொண்டு பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தாா். இதில், நகர அதிமுக செயலாளா் சதாசிவம், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் நவீன்குமாா், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளா் முனிசாமி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா்அண்ணாசாமி, நகர அதிமுக நிா்வாகிகள் தன்ராஜ், கோவிந்தன், தென்னரசு, சத்தீஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.